CINEMA
நான் இப்படி இருக்க காரணமே இவங்க தான்.. மனைவி குறித்து மனம் திறந்த வெற்றிமாறன்..!!
பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலீசான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால் வெற்றிமாறனுக்கு அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பு வந்தது.
இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டு வெற்றிமாறன் ஆடுகளம் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு சிறந்த இயக்குனர் சிறந்த திரைக்கதை ஆசிரியர் உள்ளிட்ட ஆறு தேசிய விருதுகள் கிடைத்தது. பின்னர் உதயம் nh4, நான் ராஜாவாகப் போகிறேன், பொறியாளன், காக்கா முட்டை உள்ளிட்ட படங்களை வெற்றிமாறன் தயாரித்தார்.
அசுரன், வடசென்னை, விடுதலை ஆகிய திரைப்படங்களும் வெற்றிமாறனின் சினிமா வாழ்க்கையில் பெரும் வரவேற்பை தேடி தந்தது. வெற்றிமாறன் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பூந்தென்றல் என்ற மகளும், கதிரவன் என்ற மகனும் இருக்கின்றனர். வெற்றிமாறன் தனது மனைவி குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதில் அவர் கூறியதாவது, எனக்கு வீட்ல எந்த பிரஷர்சும் கிடையாது. எனக்கு வீட்டு வாடகை தெரியாது. போன் பில் எவ்வளவு தெரியாது. கரண்ட் பில் என்னன்னு எதுவுமே தெரியாது. எல்லாத்தையும் பேலன்ஸ் பண்ணிக்கிட்டு நான் நானா இருக்கிறதுக்கும் நான் ஆசைப்படுறது செய்றதுக்கும் எனக்கு ஸ்பேஸ் கொடுக்கிறது ஆர்த்தி தான் நான் வருங்காலத்தில்ஏதாவது பெருசா பண்ணினாலும் ஆர்த்திக்கும் எனக்கும் இருக்கிற இந்த அண்டர்ஸ்டாண்டிங் தான் காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என பேசியுள்ளார்.