Connect with us

பரியேறும் பெருமாள் கதையை இவருக்காக தான் எழுதினேன்… அதை அவர்கிட்ட சொன்னதும்… மாரி செல்வராஜ் பகிர்ந்த ரகசியம்…

CINEMA

பரியேறும் பெருமாள் கதையை இவருக்காக தான் எழுதினேன்… அதை அவர்கிட்ட சொன்னதும்… மாரி செல்வராஜ் பகிர்ந்த ரகசியம்…

தமிழ் சினிமாவில் திரைப்பட இயக்குனராக திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றுபவர் மாரி செல்வராஜ். இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதையின் ஆசிரியர் ஆவார். திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் புளியங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட குடும்பத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் மாரி செல்வராஜ்.

   

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு வந்த மாரி செல்வராஜ் ஆரம்பத்தில் பல வேலைகளை செய்து வந்துள்ளார். அதற்குப் பிறகு பத்திரிகைகளில் சில நாட்கள் சில வருடங்கள் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனந்த விகடனில் மறக்க நினைக்கிறேன் என்ற தொடரை எழுதியது மாரி செல்வராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் மாரி செல்வராஜ். அவருடன் இணைந்து கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, ஆகிய படங்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

   

2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு மக்களின் மனதில் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அடுத்ததாக நடிகர் தனுசுடன் இணைந்து 2021 ஆம் ஆண்டு கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் வெற்றி படமானது. அடுத்ததாக 2023 ஆம் ஆண்டு மாமன்னன் திரைப்படத்தை வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வைத்து இயக்கினார். இந்த படமும் பாராட்டுகளை பெற்றது.

 

தற்போது மாரி செல்வராஜ் தனது நான்காவது படமான வாழை திரைப்படத்தை இயக்கி அது தற்போது வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. திரை பிரபலங்கள் முதல் நெட்டிசன்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த வருடத்தின் சிறந்த படமாக வாழை திரைப்படமாக இருக்கும் என்று புகழ்ந்து பேசி வருகின்றனர். இந்த படத்தை தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

அவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் பார்ப்போரின் மனதை கலங்கச் செய்து உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் திரையரங்கில் பலர் அழுவதாகவும் அழுது கொண்டு திரையரங்கில் வெளிவந்ததாகவும் கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை யாருக்காக எழுதினார் என்பதை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால் நான் முதலில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தனுஷ் சாரை மனதில் வைத்து தான் எழுதினேன். அப்புறம் அவரு பிஸியா இருந்ததுனால கதிரை வச்சு படத்தை இயக்கி முடிச்சிட்டோம். அப்புறம் படம் வெளிவந்த பிறகு தனுஷ் சார் எனக்கு போன் பண்ணி கூப்பிட்டாரு. அப்போ இந்த கதையை ரொம்ப நல்லா இருக்கு அப்படின்னு சொன்னாரு. அப்போ நான் உங்களுக்காக தான் இந்த கதை எழுதினேன் அப்படின்னு சொன்னேன். அப்போ தனுஷ் சார் சொன்னார், நல்ல வேளை நீங்க என்கிட்ட இந்த கதையை சொல்லல யார் இந்த படத்துல நடிக்கணுமோ எப்படி இந்த கதை வரணுமோ அந்த மாதிரி இது நல்லபடியா வந்து இருக்கு அப்படினு பெருந்தன்மையா சொன்னார் நடிகர் தனுஷ் என்று கூறியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

More in CINEMA

To Top