தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். தற்போது விடுதலை -2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

#image_title
இந்நிலையில் சினிமாவில் தான் ஆரம்பகாலத்தில் செய்த தவறுகள் குறித்தும், அதை பின்னர் சரிசெய்துகொனடது பற்றியும், அதற்கு உதவியாக இருந்த நபர்கள் பற்றியும் வெற்றிமாறன் தன்னுடைய ‘மைல்ஸ் டு கோ’ என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அப்படி வெற்றிமாறன் நன்றியோடு குறிப்பிட்டுள்ள நபர்தான் தங்க வேலவன். பாலு மகேந்திராவிடம் வெற்றிமாறன் உதவியாளராக சேரும் அங்கு பணியாற்றிய் உதவி இயக்குனர்தான் தங்க வேலவன்.
ஒருமுறை தங்கவேலவனையும், வெற்றிமாறனையும் லொக்கேஷன் பார்க்க அனுப்பியுள்ளார் பாலு மகேந்திரா. அப்போது பாலு மகேந்திரா சொன்ன அம்சங்கள் கொண்ட வீடு ஒன்றை தங்க வேலவன் பார்த்து வெற்றிமாறனிடம் காட்ட அவருக்கும் இந்த வீடு பொருத்தமாக இருக்கும் என தோன்றியுள்ளது. ஆனால் பாலு மகேந்திராவிடம் சொல்லும்போது வெற்றிமாறன் அந்த வீட்டைத் தானே பார்த்து கண்டுபிடித்தது போல ஆர்வமிகுதியில் சொல்லிவிட்டாராம்.

#image_title
அதன் பின்னர் வெற்றிமாறனை தனியாக அழைத்த தங்க வேலவன் “வெற்றி… அந்த வீட்டை நான்தான் பார்த்து உங்களுக்கு சொன்னேன். ஆனால் சாரிடம் நீங்கள் பார்த்து சொன்னதுபோல சொல்லிவிட்டீர்கள். ஆனால் சாரிடம் சொல்லும்போது, அந்த வீட்டை நான்தான் கண்டுபிடித்தேன் என்றாவது சொல்லியிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. இதல்லாம் தவறான விஷயம். எந்தவொரு சின்ன விஷயமாக இருந்தாலும் அவரவர்களுக்கு உரிய கிரெடிட்டைக் கொடுத்துவிட வேண்டும்” என சொன்னாராம். அவரின் அந்த பேச்சு சினிமாவில் தனக்கு மிகப்பெரிய திறப்பாக இருந்ததாக வெற்றிமாறன் கூறியுள்ளார்.
இப்போது வரை தன்னுடைய படம் சம்மந்தப்பட்ட சிறு விஷயமாக இருந்தால் கூட, அந்த தகவலை எனக்கு சொன்னது சம்மந்தப்பட்டவர்தான் என்ற கிரெடிட்ஸை வெற்றிமாறன் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தகக்து.
