தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. ஜெயம் ரவி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக ஜெயம்ரவி நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார் .ஜெயம் ரவி தனது ஒப்புதல் இல்லாமல் விவாகரத்தை அறிவித்து விட்டதாக ஆர்த்தி கூறியுள்ளார். இப்போது ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து விவகாரம் தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இளம் காதலர்களைப் போல இருவரும் வலம் வந்தனர். ஆனால் திடீரென விவாகரத்து செய்தியை அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர்த்தி தனது கணவர் மீது உள்ள அதீத காதலால் டார்ச்சர் செய்ததுதான் விவாகரத்துக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் உணர்ச்சிவசப்பட்டு ஜெயம் ரவி விவாகரத்து முடிவை எடுத்து விட்டதாக கூறியுள்ளார்.
மேலும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆர்த்தி எவ்வளவு ஜீவனாம்சம் கேட்பார் என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த பயில்வான் இந்த கேள்வி இப்போதைக்கு வேண்டாம். கணவன் மனைவி பிரிந்து போக வேண்டும் என்று நான் எப்போதும் நினைக்க மாட்டேன். மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் நான் லைக்குக்காக அப்படி பேச மாட்டேன் ஏனென்றால் எனக்கும் குடும்பம், மகன், மகள் இருக்கிறார்கள். ஜீவனாம்சம் கேட்கும் அளவுக்கு இது போகாது.
விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி மனு அனுப்பி இருக்கிறார். அவ்வளவுதான் விவாகரத்து வேண்டுமென்றால் இருவருக்கும் அதில் உடன்பாடு இருக்க வேண்டும். ஆனால் ஆர்த்திக்கு அதில் விருப்பமில்லை என்பதால் அவ்வளவு தூரம் போகாது. அடுத்த கட்ட நடவடிக்கையாக சுஜாதா ஜெயம் ரவியின் பெற்றோரிடம் பேசி மீண்டும் இருவரையும் சேர்ந்து வாழ வைப்பார். பேரன்களுக்காகவாது விட்டுக் கொடுத்து போக வேண்டும் என ஜெயம் ரவியை சமாதானப்படுத்துவார்கள் என்று தான் நினைப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.