500 கோடியே தொடல.. இதுல 1000 கோடி வேறயா..? GOAT படத்தின் 9 நாள் வசூல் இவ்வளவு தானா..!!

By admin on புரட்டாதி 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்தை எஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. கோட் படத்தின் பட்ஜெட் 386 கோடி ரூபாய். இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

மேலும் விஜய், அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகர் விஜயகாந்தை தொழில்நுட்பம் மூலம் கோத் திரைப்படத்தில் பயன்படுத்தி உள்ளனர். அது மட்டும் இல்லாமல் த்ரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இதில் மட்ட பாடலுக்கு திரிசா விஜய் உடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். முதல் நான்கு நாட்களில் கோட் திரைப்படம் 288 கோடி ரூபாய் வசூல் செய்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

   

 

தமிழ்நாட்டில் மட்டும் சோலோவாக 1100 திரையரங்குகளில் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தெலுங்கு திரை உலகை பொருத்தவரை கோட் படம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. சென்னை சூப்பர் கிங் மகேந்திர சிங் தோனி சிஎஸ்கேவுக்கு ஓவர் பில்டப் கொடுத்தது தான் காரணம் என கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் வெள்ளத்தால் தவித்ததால் வசூல் அங்கு குறைவாகவே உள்ளது.

நேற்றுடன் கோட் படம் ரிலீஸ் ஆகி 9 நாட்கள் ஆகிறது. 9 நாட்களில் கோட் திரைப்படம் 360 முதல் 370 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆனால் பட குழுவினர் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட கோட் திரைப்படம் 9 நாளாகியும் 500 கோடி வசூலை எட்டவில்லை. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.