ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் நடித்த RRR திரைப்படம் சுமார் ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய நிலையில் அடுத்த பிரம்மாண்ட இயக்குனர் யார் என தேடிய ராம்சரனுக்கு சங்கர் இயக்கத்தில் படம் பண்ணலாம் என்று முடிவு எடுத்து கேம் சேஞ்சர் கதையை டிக் செய்தார். இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்தத் திரைப்படத்தை தில் ராஜு தயாரித்த நிலையில் கியாரா அத்வானி, SJ சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் அஞ்சலி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றும் படத்தின் விமர்சனம் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம். ராம் நந்தன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராம்சரண் தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு மாவட்ட ஆட்சியராக வருகிறார். நேர்மையாக இருக்கும் இவர் அதிரடி ஆக்சன் களை மேற்கொள்ளும் நிலையில் இதில் அமைச்சராக நடித்துள்ள SJ சூர்யாவுக்கு இது பிடிக்கவில்லை.
இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டமும் இறுதியாக ராம் நந்தன் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் ட்விஸ்ட். அது எப்படி நடந்தது, ராம் நந்தன் யார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை உடன் கூறிய திரைப்படம் தான் கேம் சேஞ்சர். சங்கர் ஆரம்பத்தில் இருந்தே அரசியல் கதைகளை அதிகம் இயக்கி வரும் நிலையில் இந்த முறை தெலுங்கில் நேரடி படம் ராம்சரனுடன் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்த நிலையில் இப்படத்தின் கதை எளிதில் யூகிக்க முடியாத வகையில் உள்ளது.
இந்த படத்தின் கதையும் திரைக்கதையும் மிகவும் மந்தமாக நகர்கிறது. குறிப்பாக முதல் பாதியை நாயகனுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. மிகவும் பேசிக் கொண்டே இருப்பதால் எந்தவித ஈர்ப்பும் இல்லை. பிரம்மாண்டம் ரசிகர்களை கவர்ந்தாலும் கதை சுவாரசியமாக இல்லை. படத்தின் இரண்டாம் பாதியில் அமைச்சருக்கும் ஐஏஎஸ் அதிகாரிக்கும் இடையே நடைபெறும் மோதலை மையப்படுத்தி நகர்கின்றது. இதிலும் எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் இல்லை. பரபரப்பூட்டும் காட்சிகளும் படத்தின் மிக குறைவுதான். இருந்தாலும் இரண்டாம் பாதி சற்று விறுவிறுப்பாக தான் நகர்கிறது.
இது போன்ற பெரிய படங்களில் பரபரப்பு காட்சிகளுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். படத்தில் ஷங்கரின் தனித்தன்மை தெரிவது காட்சி அமைப்புகளிலும் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக் ஆட்சியிலும் மட்டும்தான். சங்கர் படங்களில் காணப்படும் எமோஷனல் கனெக்ட் இந்த திரைப்படத்தில் இல்லை. மற்றபடி படத்தில் பாடல்கள், ராம்சரண் நடிப்பு, SJ சூர்யாவின் நடிப்பு ஆகியவை பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்தத் திரைப்படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் இதில் இடம்பெற்ற ஜருகண்டி பாடலுக்கு மட்டுமே சுமார் 75 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. இப்படி மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு ஓரளவு மட்டுமே பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும் நிலையில் படத்தின் வசூலை பொருத்தே படம் வெற்றியா தோல்வியா என தெரியவரும்.
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…
மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…
ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…
சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…
நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…