ஷங்கரின் இமாலய படைப்பில் நடந்த முக்கிய தவறு… ‘எந்திரன்’ படத்தில் இப்படி ஒரு மிஸ்டேக்கா..? ஷாக்கில் ரசிகர்கள்…

By Begam on பிப்ரவரி 4, 2024

Spread the love

இந்திய சினிமாவில் அறிமுகம் தேவைப்படாத ஒரே பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள். இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான பல படங்களை இயக்கி வருகிறார். 1993ல் வெளியான ஜென்டில்மேன் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இவர் இதைத் தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என அடுத்த ஏழு வருடங்களில் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டுள்ளார்.

   

சமூக கருத்துக்களை அதிகம் சொல்லும் கதைகளை தான் அவர் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.  அப்படி ஸ்டாரை வைத்து 2010-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் கொடுத்த சூப்பர் ஹிட் படம் தான் எந்திரன்  ரோபோவை வைத்து தமிழ் சினிமாவில் ஒரு ஹாலிவுட் தரத்திலான படத்தை கொடுத்தார்.

   

 

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், வசீகரன் என்கிற சயிண்டிஸ்ட் ஆகவும், சிட்டி என்கிற ரோபோவாகவும் இரட்டை வேடத்தில் நடித்து மாஸ் காட்டி இருந்தார். 14  வருடங்களுக்கு பிறகு தற்போது இத்திரைப்படத்தில் மிஸ்டேக் ஒன்றை நெட்டிசன் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அதாவது, ‘எந்திரன்’ படத்தில் வசீகரன் சிட்டியை விஞ்ஞானிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தும் போது, அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து அசரவைக்கும் சிட்டி.

அதில் ஒரு கேள்வியில் 24157817 Fibonacci (ஃபிபொனாச்சி) நம்பரா என கேட்கப்படும். அதற்கு ஆம் என பதிலளிக்கும் சிட்டி அது 22-வது ஃபிபொனாச்சி நம்பர் என கூறும். ஆனால் உண்மையில் 22-வது ஃபிபொனாச்சி நம்பர் 17711 தானாம். சிட்டியிடம் கேட்கப்பட்ட 24157817 என்பது 37வது ஃபிபொனாச்சி நம்பர். இந்த லாஜிக் மிஸ்டேக்கை 14 ஆண்டுகளாக யாரும் கவனிக்காமல் இருந்த நிலையில், தற்போது நெட்டிசன் ஒருவர் கண்டுபிடித்துள்ளதால் அது வைரலாகி வருகிறது.