கேம் சேஞ்சர் படத்துக்கு வேற நல்ல சீன் எல்லாம் வச்சிருந்தேன்.. புது உருட்டு உருட்டும் ஷங்கர்.. தோல்விக்கு இது ஒரு சாக்கா..?

By Nanthini on தை 15, 2025

Spread the love

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கேம் சேஞ்சர். படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் ஆதித்யா ராம் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தனர். தமானிசையமைத்த இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் உருவாக்க மட்டும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து 75 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டதாக படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பட குழு தெரிவித்திருந்தது.

கம்பேக் கொடுத்தாரா ஷங்கர்?... 'கேம் சேஞ்சர்' விமர்சனம்!

   

சங்கரின் முந்தைய திரைப்படமான இந்தியன் 2 படம் பாக்ஸ் ஆபிஸில் மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் படு தோல்வியாக மாறியது. இப்படியான நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் சங்கரை மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக மாற்றுமா என்ற கேள்வி இருந்து வந்தது. இந்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் நேற்று ரிலீசான நிலையில் படத்திற்கு இரு வேறு கருத்துக்கள் பெரும்பான்மையான ரசிகர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தெலுங்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில் தமிழ்நாட்டில் ரசிகர்கள் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை சங்கர் தன்னுடைய படத்தையே மீண்டும் எடுத்து வைத்துள்ளார் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். படத்தின் கதையை பொருத்தவரை ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையில் நடக்கும் மோதல் தான் கதைக்களமாக அமைந்துள்ளது.

   

எப்படி இருக்கு கேம் சேஞ்சர்!!- Game DANGER!! ஐய்யா ஷங்கரு... புலம்பும் ரசிகர்கள்.. - விடுப்பு.கொம்

 

சங்கர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் அரசியல் கதையை மையப்படுத்தி வெளியான திரைப்படம். இருந்தாலும் கேம் சேஞ்சரின் வசூல் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. படக்குழுவினர் வசூல் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கூறுவதாக சிலர் கூறி வருகின்றனர். கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 186 கோடி வசூல் செய்ததாக பட குழு அறிவித்த நிலையில் வசூல் எண்ணிக்கை வேண்டும் என்றே அதிகமாக காட்டுவதாக சில நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். படத்தின் கதை சொல்லிக் கொள்ளும்படி இல்லாத பட்சத்தில் எப்படி வசூல் மற்றும் எவ்வளவு இருக்கும் என கூறுகிறார்கள். படம் வெளியான மூன்றாம் நாள் முடிவில் உள்ளூர் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 89 கோடி வசூலித்ததாக தெரிகிறது.

Game Changer Review: ராம் சரண் அசத்தல்.. சரிந்த இமேஜை தூக்கி நிறுத்திய ஷங்கர்! கேம் சேஞ்சர் விமர்சனம் | Game Changer Movie Review: Ram Charan's Powerful Performance Against Corruption ...

இப்படியான நிலையில் படம் தோல்வியை சந்தித்ததற்கான காரணம் குறித்து சங்கர் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அதில், கேம் சேஞ்சர் படத்தில் இப்ப இருக்க காட்சிகளை விட பல சுவாரசியமான காட்சிகள் நிறைந்து இருந்தது. ஆனால் ட்ரிம் பண்ணும் போது நிறைய காட்சிகள் விட்டுப் போய்விட்டது. படத்தின் டூரேஷன் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் இருந்தது. ஆனால் அத்தனையும் படத்தில் வைக்க முடியாது என்பதால் முடிந்த அளவிற்கு படத்தை ட்ரிம் பண்ணி விட்டோம். என்ன பண்ணாலும் தயாரிப்பாளர்களுக்கு திருப்தி இருக்காது. இன்னும் சில விஷயங்கள் வைத்திருக்கலாம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது என கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கான காரணத்தை சங்கர் பேசியுள்ளார்.