அன்னைக்கு உண்மையிலேயே நடந்தது இதுதான்.. விஷால் குறித்த சீக்ரெட்டை உடைத்த வலைப்பேச்சு பிஸ்மி..!

By Nanthini on தை 15, 2025

Spread the love

12 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் இருந்த மதகஜராஜா திரைப்படம் இந்த பொங்கலுக்கு ரிலீசுக்கு நாங்களும் போட்டிக்கு வரலாமா என்று அதிரடியாக களமிறங்கியுள்ளது. கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்ட் கடந்த ஜனவரி 5ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர் சி மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய விஷால் மிகுந்த கை நடுக்கத்துடனும் குரல் நடுக்கத்துடனும் பேசினார். இதனைத் தொடர்ந்து விஷாலுக்கு என்ன ஆனது என்று அனைவரும் பதறிப் போன நிலையில் கடந்த ஒரு வாரமாக விஷால் குறித்த செய்திகள் தான் இணையத்தில் உலா வந்தது.

2026 ஆம் ஆண்டில் புதிய கட்சி; நடிகர் விஷால் அறிவிப்பு | nakkheeran

   

விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இந்த நிலையில் இருந்து விஷால் விரைவில் மீண்டும் வர வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் விஷாலுக்கு நரம்பு தளர்ச்சி மற்றும் குடிக்கு அடிமையாகி விட்டார் என்று பல வதந்திகளும் பரவிக் கொண்டிருந்தது. இப்படியான நிலையில் நேற்று முன்தினம்  நடந்த மதகஜராஜா படத்தின் பிரீமியர் ஷோவில் நடிகர் விஷால் பழைய உற்சாகத்துடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த நிகழ்ச்சியில் என் நிலையை பார்த்த பலரும் மெசேஜ் மூலமாகவும் தொலைபேசி மூலமும் என்னிடம் நலம் விசாரித்தார்கள். இந்த அளவிற்கான அன்பை உண்மையில் நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லோருக்கும் மிக்க நன்றி.

   

Actor Vishal Health Update: நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? மருத்துவமனை  வெளியிட்ட அறிக்கை! | OnlyMyHealth

 

இவ்வளவு அன்புக்கு நான் கடமைப்பட்டுள்ளேன், அடிமையாக இருக்கிறேன். நிறைய பேர் நான் அப்பல்லோ காவேரி மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக எழுதினர். ஆனால் நான் எங்கும் அட்மிட் ஆகவில்லை. மார்க் ஆண்டனி படத்தில் சொல்வது போல, நான் வீழ்வேன் என்று நினைத்தாயா? நான் விழ மாட்டேன் என்பதை தான் இங்கு சொல்ல நினைக்கிறேன். என்னுடைய தன்னம்பிக்கையும் என் அப்பாவின் தன்னம்பிக்கையும் தான் என்னுடைய பலம். இந்த இரண்டும் இருக்கும் வரை எந்த ஒரு தடையையும் சர்ச்சையையும் நான் தாண்டி வருவேன் என விஷால் பேசியிருந்தார்.

இவ்வளவு அன்பை நான் எதிர்பார்க்கலை; ரொம்ப ரொம்ப நன்றி... இப்போ நல்லா  இருக்கேன்” - விஷால் / Actor Vishal in Madha gaja raja preview show

இந்நிலையில் விஷாலுக்கு உண்மையிலேயே நடந்தது என்ன என்பது குறித்து வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், விஷால் அன்னைக்கே மேடையில் கை நடுக்கத்துடன் குரலில் தடுமாற்றத்துடன் பேசியது எல்லாமே ஒரு நாடகம் நடிப்பு என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு வைரஸ் காய்ச்சல் அதனாலதான் இப்படி இருக்காரு என்று மேடையில் சொன்னது கூட ஒரு பொய் தான். அவர் எதுக்காக அப்படி நடந்துக்கிட்டார்னு அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ண சுந்தர் சி குஷ்பூ இருவருக்குமே தெரியும். அங்க இருந்த தொகுப்பாளர்கள் மட்டுமல்ல மீடியாக்கள் எல்லோருக்குமே உண்மை என்னன்னு தெரியும்.

கள்ளக்காதல்.. அவர் வேலையை காட்டிட்டார், ஆதாரங்களுடன் பார்த்துள்ளேன் -  அம்பலப்படுத்திய பிரபலம்! - தமிழ்நாடு

இருந்தாலும் அவர் கை நடக்கத்துடன் காணப்பட்ட வீடியோ வெளியான பிறகு பதறிப்போன அவருடைய நண்பர்கள் எப்படியாவது விஷாலை இந்த நிலையிலிருந்து மீட்டு வர வேண்டும் என போராடினர். உண்மையில் விஷாலுக்கு சில பிரச்சனைகள் இருப்பது உண்மைதான். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். மேடையில் கூட விஷாலை பலமுறை தொடர்பு கொள்ள முடியாமல் போனது என குஷ்பூ பேசி இருந்தார். நாம் எல்லாம் மணி கணக்கில் தொங்கினால் விஷால் எல்லாம் நாள்கணக்கில் தூங்கக் கூடியவர். அன்னைக்கு மேடையில் நடந்தது எல்லாமே ஒரு நாடகம் தான் என்று பிஸ்மி உண்மையை உடைத்துள்ளார்.