சம்பாதித்து 10 வருஷம் ஆச்சு….! என் மனைவியால் இன்னைக்கு…! மனம் திறந்து பேசிய ஆர்.கே செல்வமணி…!!

By Devi Ramu on ஆவணி 30, 2025

Spread the love

பிரபல இயக்குனரான ஆர்.கே செல்வமணி கடந்த 1990-ஆம் ஆண்டு புலன் விசாரணை திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார். பின்னர் 1991-ஆம் ஆண்டு விஜயகாந்த்தை வைத்து அவரது நூறான திரைப்படம் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு அளித்த ஒரு பேட்டியில் ஆர்கே செல்வமணி கூறியதாவது, நான் சம்பாதித்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் வீட்டில் அதே மரியாதையுடன் இருப்பதற்கு காரணம் என் மனைவி என் மீது வைத்துள்ள அன்பும், மரியாதையும் தான். பொருளாதாரத்தில் மேலிருந்து கீழ் இறங்கும்போது அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை வேறு மாதிரி இருக்கும்.

   

ஆனால் எனக்கு அந்த மாதிரி பிரச்சனை வந்தது கிடையாது. என் மனைவி எனக்கு முழு ஆதரவு கொடுத்து ஒரு நல்ல மனைவியாக, தோழியாக உள்ளார். எந்த வேலையும் இல்லாமல் அலுவலகத்தில் இரவு பகலாக உட்கார்ந்து இருக்கிறீர்கள் என என் மகள் கிண்டல் செய்வார். ஆனால் ரோஜா அதைப்பற்றி கேட்டது கிடையாது. நான் சாப்பிடும் சாப்பாடு, போடும் டிரஸ், என் கார் அதற்கு டீசல் எல்லாமே என் மனைவி தரக்கூடிய பணம் தான் என ஆர்.கே செல்வமணி கூறியுள்ளார்.