“உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணி வை…” மின் கோபுரத்தில் ஏறி 2-வது மனைவியை மிரட்டிய நபர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 30, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ் சக்சேனா. கடந்த 2021-ஆம் ஆண்டு ராஜ் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆனால் அடுத்த ஆண்டே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு ராஜின் மனைவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜ் தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொண்டார்.  இரண்டு ஆண்டுகள் இவர்களது வாழ்க்கை நன்றாக சென்றது. இந்த நிலையில் ராஜ் தனது மனைவியின் மற்றொரு இளைய தங்கையை காதலித்து அவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அறிந்த ராஜின் மனைவி அவரது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த ராஜ் அப்பகுதியில் இருக்கும் உயரமான மின் கோபுரத்தில் ஏறி மனைவியின் தங்கையை திருமணம் செய்து வைத்தால் தான் கீழே இறங்குவேன் என கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி ராஜை கீழே இறங்க வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.