இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 28 திரைப்படத்தின் மூலம் இயக்குனராகத் திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படம் பெரிய லாபத்தை தரவில்லை. வெங்கட் பிரபு சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது.
மதராஸி, பராசக்தி ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடிக்கலாம் என சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க வெங்கட் பிரபு 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 கோடி வரை கொடுப்பதற்கு தயாரிப்பு நிறுவனத்தினர் தயாராக உள்ளனர். ஆனால் வெங்கட் பிரபு நான் விஜயை வைத்து படம் எடுத்தவன் எனக்கு 20 கோடி கொடுத்தால் என்ன என கேட்டதாக தெரிகிறது. அதில் தயாரிப்பு நிறுவனத்திற்கு உடன்பாடு இல்லையாம். இதனால் இது தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வந்தால் தான் இந்த படத்தின் அடுத்த கட்ட நிலைமை என்ன என்பது தெரியவரும்.
