விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் முழுநேரமாக இறங்கிவிட்டார். இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாகவும், ஒருசிலர் எதிர்த்தும் பேசி வருகிறார்கள். ஆனால் அதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் விஜய் தனது வழியில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய் டெபாசிட் கூட வாங்க முடியாது என தேவயானியின் கணவர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய ராஜகுமாரன், “தேவயானி பிறந்ததும், விஜய் பிறந்ததும் ஜூன் 22 ஆம் தேதி.
அதனால் தான் இப்போது வரை இருவரும் உச்சத்தில் இருக்கிறார்கள். விஜய்யை நாங்கள் பொத்தி பொத்தி பூங்கொத்து போல் 30 வருஷம் பாதுகாத்தோம். இப்போது அவர் வெயிலில் மக்களோடு எப்படி நிப்பார்? முதல்வர் ஸ்டாலின் போல அவரால் தெருவில் நடக்க முடியுமா? விஜய் கூட்டணி வைக்காவிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது” என கூறினார்.
