ஸ்ரீதிவ்யாவை படத்தில் நடிக்க வைக்க காரணமே அது தான்.. மத்த பொண்ணுங்க மாதிரி அவங்க இல்ல.. மனம் திறந்த இயக்குனர் பிரேம்..!

By Nanthini on ஐப்பசி 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் இயக்குனர் தான் பிரேம்குமார். திரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தை இயக்கி அனைவரையும் காதலே காதலே என புலம்ப வைத்தவர் தான் இயக்குனர் பிரேம்குமார். அந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சுமார் ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் தான் மெய்யழகன். இந்தத் திரைப்படத்தில் கார்த்திக், அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் மற்றும் தேவதர்ஷினி என்று பலர் நடித்துள்ளனர். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.

   

இப்படத்திற்கு கோவிந்த் வசந்த் இசை அமைத்துள்ளார். சொத்து பிரச்சனையால் பிறந்து வாழ்ந்த ஊரை விட்டு குடும்பத்துடன் சென்னையில் செட்டில் ஆகிவிடுவார் அரவிந்த் சுவாமி. 22 வருஷமாக எந்த ஒரு நல்லது கெட்டதிற்கும் ஊர் பக்கம் தலை காட்டாத அவர் தன் தங்கையின் திருமணத்திற்காக 22 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு செல்வார். அங்கு செல்லும் அவரை பாசத்தை கொட்டி கவனித்துக் கொள்கிறார் கார்த்தி. ஆனால் அவர் என்ன உறவு என்று அரவிந்த்சாமிக்கு தெரியாது. இறுதியில் இருவருக்கும் என்ன உறவு என்று தெரிந்ததா என்பது தான் படத்தின் கதை ஆகும். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

   

 

தமிழில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலம் நடித்து சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு பட வாய்ப்பு இல்லாததால் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதிவ்யாவை மெய்யழகன் திரைப்படத்தில் நடிக்க வைத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து இயக்குனர் பிரேம்குமார் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில், என் அம்மா சொல்லி தான் ஸ்ரீதிவ்யாவை இந்த படத்தில் நான் நடிக்க வைத்தேன். அவங்களுக்கு சரியா என்ன படம்னு சொல்ல தெரியல ஆனா ஸ்கூட்டில ஒரு பொண்ணு முறைச்சிக்கிட்டே போகுமே அந்த பெண்ணை ஏன் நீ ஜூஸ் பண்ண கூடாது என்று அவங்க என்கிட்ட கேட்டாங்க. அவங்களுக்கு படத்தோட மொத்த கதையும் தெரியும். அதனால இந்த படத்துக்கு கரெக்டான பொண்ணு ஸ்ரீதிவ்யா தான் என்று எங்க அம்மா என்கிட்ட சொன்னாங்க. அதனாலதான் ஸ்ரீதிவ்யாவை இந்த படத்துல நடிக்க வைத்தேன். மற்ற நடிகைகள் மாதிரி ஸ்ரீதிவ்யா கிடையாது நிறைய படத்துல நடிச்சிட்டோம் அப்படிங்கிற எண்ணமும் அவங்களுக்கு இல்ல இன்னமும் அந்த கிராமத்தில் உள்ள இன்னசென்ட் மாதிரிதான் ஸ்ரீதிவ்யா இருக்காங்க என்று இயக்குனர் பிரேம் பேசியுள்ளார்.