சிவாஜிக்கு எழுதுன ஒரு பாட்டு.. மொத்த சினிமா லைஃபும் க்ளோஸ்.. ஏ.வி.எம்-ல் புலம்பிய கண்ணதாசன்..!

By Nanthini on ஐப்பசி 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய மனித உணர்ச்சிகளால் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலமாக உயிர் கொடுத்தவர்தான் கண்ணதாசன். காதல், தாலாட்டு மற்றும் சோகம் என்று அனைத்திற்கும் தன்னுடைய வரிகளால் ஆறுதல் கூறியுள்ள கண்ணதாசனின் இன்று இல்லை என்றாலும் அவருடைய பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் எம் எஸ் வி முக்கிய காரணம் என்று சொல்லலாம். எம் எஸ் வி மற்றும் கண்ணதாசன் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில் இவர்களின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்ற கண்ணதாசன் தனக்கு போட்டியாக யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டு எம் எஸ்வியுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார்.

   

 

   

ஒரு கட்டத்தில் கண்ணதாசனுக்கு போட்டியாக வாலி வந்த நிலையில் கண்ணதாசனுக்கான வாய்ப்பு குறைய தொடங்கியது. அவரின் அரசியல் மோதல்களும் வாய்ப்புகள் குறைய ஒரு காரணமாக இருந்தன. இந்த சமயத்தில் கண்ணதாசன் சிவாஜி படத்திற்காக தான் எழுதிய ஒரு பாடலால்தான் தனக்கான வாய்ப்பு குறைந்து விட்டதாக ஏவிஎம் நிறுவனத்தில் புலம்பியதாக தயாரிப்பாளர் ஏவிஎம் குமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது 1962 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படித்தால் மட்டும் போதுமா என்ற திரைப்படத்தில் சிவாஜி, சாவித்திரி மற்றும் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

 

இந்த படத்தில் ஒரு பாடலைத் தவிர மற்ற அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற நான் கவிஞனும் அல்ல நல்ல ரசிகனும் இல்லை என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் இந்த பாடல் தான் தனக்கு போட்டியாக பல கவிஞர்கள் உருவாக காரணம் என்று கண்ணதாசன் உறுதியாக நம்பியுள்ளார். அதற்கு முக்கிய காரணம் இந்த பாடல் அறச்சொற்களால் எழுதப்பட்டுள்ளதாக அவர் நினைத்துள்ளார். அடிப்படையில் தமிழ் சினிமாவின் முக்கிய கவிஞராக இருந்த கண்ணதாசன் இந்த பாடல் எழுதியதால் தான் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நினைத்துள்ளார்.