நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த ஆச்சார்யா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கொரட்டல்லா சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் தேவரா. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்திருந்தார். இதன் மூலமாக அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதித்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் சைஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்த நிலையில் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

முதல் பாகம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் சுறா மற்றும் சிலம்பாட்டம் படங்களை போல் இருப்பதாக பலரும் விமர்சித்தனர். ஆனால் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம் முதல் நாளில் 172 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த நிலையில் இப்படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் கூடுவதும் குறைவதுமாக இருந்தது.

இந்த நிலையில் படம் வெளியாகி ஏழு நாட்களை கடந்துள்ள நிலையில் உலக அளவில் இந்த திரைப்படம் சுமார் 405 கோடி வசூல் செய்துள்ளதாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரித்தால் விஜயின் கோட் திரைப்படத்தின் வசூலை முறியடிக்கும் எனவும் கூறப்படுகிறது.
