Categories: சினிமா

15 வருடங்களுக்கு முன்பே பார்த்திபனை சந்திக்க சென்ற சுவாசிகா… அவரே பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்…!

Spread the love

லப்பர் பந்து படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாக நடிகை சுவாசிகா நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் பல வருடங்களுக்கு முன்பே வைகை, கோரிப்பாளையம், சாட்டை ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த அளவிற்கு இவர் பெயர்வெளி வரவில்லை.இதனால் மலையாள படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் லப்பர் பந்து படத்தின் மூலமாக திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய படம், ‘லப்பர் பந்து’.

இதில் ‘அட்டகத்தி’ தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்த இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இவர் விஜய் டிவி சீரியல் நடிகர் பிரேம் ஜேக்கப் என்பவருடைய மனைவி என்பது பலரும் தெரிந்திருக்காத ஒரு விஷயம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான நீ நான் காதல் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

தற்போது சுவாசிகா தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நிலையில் இவர் குறித்து நடிகர் பார்த்திபன் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அதில், லப்பர் பந்து படத்தில் நடித்த சுவாசிகா சுமார் 15 வருடங்களுக்கு முன்பே ஒரு ஆடிஷனில் சினிமா வாய்ப்பு தேடி வந்திருந்தார். அப்போது வேற ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்லி அனுப்புறேன் என்று சொல்லி அவங்கள அனுப்பிட்டேன். பிறகு லப்பர் பந்து படத்தை பார்த்து வியந்து அவங்கள தேடி கண்டுபிடித்து நான் பேசினேன்.

அப்போ என்ன சார் என்ன மறந்துட்டீங்களா நீங்க சொல்லி கொடுத்த டயலாக் கூட எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு என்று பேசுனாங்க. இந்த 15 வருட இடைவேளையில் சுவாசிகாவிடம் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. பொதுவாகவே பெண்களுக்கு ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான பயம் வந்து விடும். ஆனால் இந்தப் பெண் எந்தவித பயமும் இல்லாமல் சினிமாவில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் என சுவாசிகா பற்றி பார்த்திபன் புகழ்ந்து பேசி உள்ளார்.

Nanthini

Recent Posts

சுக்குநூறான கட்டடம்..! 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அலறல்… நொடியில் நடந்த கோர விபத்து… பதறவைக்கும் வீடியோ…!!

பால்கர் மாவட்டத்தின் போய்சார் பகுதியில் உள்ள தாராபூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'விராஜ் ப்ரொஃபைல்ஸ்' எஃகு உற்பத்தி ஆலையில் திங்கள்கிழமை…

1 minute ago

“என்னிடம் ஆடியோ ஆதாரம் இருக்கு”… புதிய அமைச்சர்களின் கமிஷன் லீக்ஸ்… விஜய்க்கு அண்ணாமலை வைத்த செக்…. அரசியலில் திடீர் பரபரப்பு…!

தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதே தனது அரசின் முதன்மை இலக்கு என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்…

2 minutes ago

பள்ளிக்கு அனுப்பவே பயமாக இருக்கு…! மெட்ரோ விபத்தால் பதறிப்போன பெற்றோர்கள்… அரசுக்கு MNS வைத்த அதிரடி செக்…!!

மீரா ரோடு - பயந்தர் எல்லையில் உள்ள கோல்டன் நெஸ்ட் பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில்,…

11 minutes ago

“‘கல்யாணம் பண்ணிக்கோ’ன்னு கேட்டது ஒரு குத்தமா?”…. காதலியை வெட்டிக் கொன்று சாக்கில் அடைத்த இளைஞர்…. வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்…!

ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

12 minutes ago

“ஒரே ஒரு வார்த்தை… ஓங்கி அறைந்த போலீஸ்”…. பதிலுக்கு திருப்பி அடித்த வாலிபர்…. தஞ்சையில் உச்சகட்ட பரபரப்பு…. ஷாக்கிங் வீடியோ…!

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்‌டிருந்த விசிக பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர்…

20 minutes ago

“என்னை விட்டுரு… மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்த மர்ம நபர்…” தூய்மை பணியாளரை கொடூரமாக தாக்கிய கொலையாளி… சரிந்து விழுந்த வாலிபர்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் டெல்லி மாநகராட்சியில் (MCD) தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த அனில் (27) என்ற வாலிபர்…

26 minutes ago