“பருத்திவீரன் சர்ச்சையில் சூர்யா சார் ஒரு லெட்டர் ரெடி பண்ணாரு… இந்த காரணத்துனாலதான் அது வெளிவரல”… பிரபலம் பகிர்ந்த தகவல்

By vinoth on ஜூன் 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான மைல்கல் திரைப்படமாக கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது பருத்தி வீரன் திரைப்படம். இந்த படத்தில் அறிமுகமான கார்த்தி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். அந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றனர், அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும்.

ஆனால் பட இந்த பட ரிலீஸூக்குப் பிறகு படத்தில் பணியாற்றிய கலைஞர்களாக அமீர், கார்த்தி மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது.  அதற்கு முக்கியக் காரணமாக இயக்குனர் அமீருக்கு தரவேண்டிய ஒரு கோடி ரூபாய்க்கு மேலான பணத்தை தராமல் ஞானவேல் ராஜா ஏமாற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது.

   

இந்த விவகாரம் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மிகப்பெரிய வைரலாக இருந்த விஷயம் பருத்திவீரன் தயாரிப்பு குறித்த விவகாரத்தில் அமீர் – ஞானவேல் ராஜா பிரச்னை தான். இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்பது குறித்து இயக்குநர் அமீர் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பல விஷயங்களை கூறியிருக்கிறார்.

   

ஞானவேல் ராஜா அமீர் சரியாக கணக்கு காட்டவில்லை என்றும் பொய்க் கணக்கு எழுதினார் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து அமீருக்கு ஆதரவாக பல இயக்குனர்களும், பருத்திவீரன் படத்தில் பணியாற்றியவர்களும் பேசினர். இதனால் சூர்யா தரப்பு மேல்தான் மொத்த தவறும் என்பது போல சமூகவலைதளங்களில் பேசப்பட்டது.

 

#image_title

இதுகுறித்து இப்போது இயக்குனர் பாண்டிராஜ் பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றது. அவர் ஒரு நேர்காணலில் “அந்த பிரச்சனை நடந்த போது நான் சூர்யா சாருக்கு அழைத்து, ஏன் சார் நீங்கள் இது சம்மந்தமாக எந்த  விளக்கமும் கொடுக்கவில்லை என்றேன். அதற்கு அவர் “ஏன் சார் தேவையில்லாம, நாமும் அந்த கல்லை எடுத்து எறியவேண்டுமா? நான் அவர் மேல் மரியாதை வைத்திருக்கிறேன், அதைக் கெடுக்க வேண்டாமே?’ என்றார்.

நான் ‘அதெல்லாம் சரிதான் சார். ஆனால் வெளியில் இருந்து பார்க்கும்போது முழு தவறும் உங்கள் மேல் என்பது போல உள்ளது’ என்றேன். நாங்கள் சிலர் பேசி ஒரு அறிக்கை ஒன்றை தயார் செய்தோம். ஆனால் அப்போது விஜயகாந்த் சார் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தார். அப்போது வெளியிட்டால் சரியாக இருக்காது என்பதால் காத்திருந்தோம். பின்னர் சென்னை மழை வெள்ளப் பிரச்சனை வந்துவிட்டது. அதனால் அந்த லெட்டர் கடைசி வரை வெளியிடவே இல்லை. அது வந்திருந்தால் சூர்யா சார் பக்கம் இருக்கும் நியாயமும் தெரிந்திருக்கும். அவர்கள் பக்க நியாயம் ரொம்ப நியாயமாகவே இருந்தது” எனக் கூறியுள்ளார்.