“பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி”.. பிரபலத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட அம்மு அபிராமி.. ஒருவேல இருக்குமோ?

By Mahalakshmi on ஜூன் 11, 2024

Spread the love

நடிகை அம்மு அபிராமி தனது காதலை உறுதிப்படுத்தி, காதலருக்கு வாழ்த்து சொன்ன புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் அம்மு அபிராமி. தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பைரவா என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார் . அதைத்தொடர்ந்து ராட்சசன், அசுரன் போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் கடந்த சில மாதத்திற்கு முன்பு கண்ணகி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

   

அதுமட்டுமில்லாமல் ஹாட் ஸ்டார்ட் என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் அம்மு அபிராமி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் உருவானது.

 

இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலரை அறிமுகம் செய்துள்ளார். கடந்த சில மாதத்திற்கு முன்பு இவர் குக் வித்து கோமாளி இயக்குனர் பார்த்தி மணி என்பவரை காதலித்து வருவதாக வதந்திகள் பரவி வந்தது. அதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்து அபு அபிராமி தற்போது தனது காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன்களையும் இயக்குனர் பார்த்திவ் மணி தான் இயக்கியிருந்தார். இந்நிலையில் நடிகை அம்மு அபிராமி பார்த்திவ் மணியின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்ததற்கு நன்றி என் வாழ்வில் வந்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இதன் மூலம் ரசிகர்கள் பலரும் இருவரும் காதலர்கள் என்பது உறுதியாகிவிட்டது என கூறி வருகிறார்கள்.