கிராமத்து பின்னணியில் படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் முத்தையா. இவர் இயக்குனராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் வேலை பார்த்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு சசிகுமார் நடித்த குட்டிப்புலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கார்த்திக்கை வைத்து கடந்த 2015-ஆம் ஆண்டு கொம்பன் திரைப்படத்தை இயக்கினார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு மருது படத்தை இயக்கினார். இதனை தொடர்ந்து கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, விருமன், காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கி திரை உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார். கிராமத்து பாங்கான கதைகளை ஆக்ஷன் காட்சிகளுடன் இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இந்த நிலையில் எம்.மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு கடைசி விவசாயி திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இந்த திரைப்படத்தில் விவசாயியான நல்லாண்டியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார். நல்லாண்டிக்கு 85 வயது ஆகிறது. இது மட்டுமில்லாமல் யோகி பாபு முனீஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடைசி விவசாயி படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது. சமீபத்தில் எம் முத்தையா அளித்த பேட்டியில் கூறியதாவது, முள்ளும் மலரும் படத்தில் நடித்த ரஜினிகாந்த் கடைசி படத்திலும் நடிச்சிருக்கணும்.
அந்த படம் பார்க்கும்போது எனக்கு அப்படி தான் தோணுச்சு. ரஜினி சார் பண்ணி இருந்தா அந்த படத்தோட ரீச் உலக அளவில் இருந்திருக்கும். நல்ல கதைகள் கிடைக்கிறப்போ ரஜினி சார் இதை பண்ணி இருக்கணும் என கூறியுள்ளார். கடைசி விவசாயி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடித்திருக்க வேண்டும். அவர் நடித்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.