அடுத்தவன் பொண்டாட்டி அழகா இருந்தா..? இது நாம சமாதிக்கு போறவரைக்கும் போகாது.. செல்வராகவன் வெளியிட்ட வீடியோ..

By Mahalakshmi on ஜூலை 25, 2024

Spread the love

இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். தற்போது இயக்கத்தை தாண்டி நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார். காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கிய செல்வராகவன் அதன்பிறகு ஏகப்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார்.

   

   

இவரின் திரைப்படங்களில் செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இவர் காதல் கொண்டேன் படத்தில் நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதையடுத்து 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த தம்பதிகளுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார், ரிஷிகேஷ் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவர் தற்போது தனது தம்பி தனுஷ் இயக்கத்தில் ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்நிலையில் நடிகர் செல்வராகவன் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “நாம் பிறக்கும் போது கூடவே பிறந்தது என்று ஒன்று உள்ளது.

கை, கால், மண்டை என அனைத்தையும் போன்று மற்றொரு விஷயமும் இருக்கின்றது. அது தான்  பொறாமை. தெருவில் நடந்து போறவன் பொண்டாட்டி அழகா இருந்தா அத பாத்து பொறாமை, பக்கத்து வீட்டுக்காரன் கார் வாங்கினால் அதை பார்த்து பொறாமை, ஆபீஸ்ல இன்னொருத்தருக்கு ப்ரமோஷன் கிடைச்சா அத பார்த்து பொறாமை. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

பொறாமை அது ஒரு கேன்சர் போல நம் உடம்பில் பரவி பரவி அது நம்மள நச்சுரிச்சு கடைசி சமாதி வரைக்கும் அந்த பொறாமை இருந்துகிட்டே இருக்கும். இத வந்து இல்லன்னு சொல்றவங்கள நம்பவே நம்பாதீங்க. முற்றிலும் துறந்தவர்கள் என யாராயிருந்தாலும் இந்த பொறாம இருக்க தான் செய்யும். இந்த பொறாமையை எப்படி இல்லாம வாழ்றது அப்படின்னு கேட்டா அதுக்கு பதில் கிடையாது.

அது இல்லாம வாழ முடியாது, இதுக்கு மருந்தும் கிடையாது. அப்ப என்ன பண்றது எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அது கூட மல்லுக்கட்ட மல்லுக்கட்ட அதோட பவர் ஜாஸ்தி ஆகிக்கிட்டே தான் இருக்கும். அதே போல பொறாமையை போட்டு நசுக்க நசுக்க அதோட பவர் ஜாஸ்தியாகி கிட்டே போகும். வளர்ந்துகிட்டே போகும். அதை நீங்க ஒரு பார்ட்டா எடுத்துக்கோங்க.

 

View this post on Instagram

 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

பொறாமையா வா நண்பா அப்படி ஓரமா உட்காரு, ஆமா பொறாமைப்படுறேன் பொறாமை இருக்கு என்ன பண்ண முடியும் அப்படின்னு சொல்லிட்டு நீங்க பேசாம உங்க வேலையை கவனித்துக் கொண்டே போங்க. இப்படி கொஞ்ச நாள் அல்லது கொஞ்சம் வருஷம் போகப் போக உங்களுக்கே தெரியாம மேஜிக்கா அந்த பொறாமை மறைந்துவிடும்” என்று இந்த வீடியோவில் பேசியிருந்தார்.