90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகை சௌந்தர்யாவின் தந்தை கன்னட திரைப்பட எழுத்தாளரும் தயாரிப்பாளரும் ஆவார்.

கடந்த 1992-ஆம் ஆண்டு பா நானா பிரீதீசு என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார் அதன் பிறகு 1993 -ஆம் ஆண்டு தமிழில் கார்த்திக் ஜோடியாக பொன்னுமணி திரைப்படத்தில் நடித்தார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் உடன் சௌந்தர்யா இணைந்து நடித்த அருணாச்சலம் படையப்பா ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.

விஜயகாந்த் உடன் சௌந்தர்யா இணைந்து நடித்த தவசி, சொக்கத்தங்கம் ஆகிய திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஜி.எஸ் ரகு என்பவரை சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பாரதியார் ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவார். கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி விமான விபத்தில் சௌந்தர்யா உயிரிழந்தார்.

இறக்கும்போது சௌந்தர்யா கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும் பொதுவாக பிரபலங்களையும் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகும். அந்த வகையில் சௌந்தர்யாவின் சிறு வயது புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

