பிரபல நடிகரான நெப்போலியன் கடந்த 1991-ஆம் ஆண்டு ரிலீசான புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் வில்லனாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் நடித்தார். சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட கிராமத்து திரைப்படங்களில் நெப்போலியன் நடிப்பு மிரட்டலாக இருக்கும்.
சினிமாவை தாண்டி அரசியலிலும் நெப்போலியனுக்கு ஈடுபாடு அதிகம். திமுக சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் கடந்த 2001-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகித்தார். அதன் பிறகு பெரம்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக மாறினார். இப்போது நெப்போலியன் அமெரிக்காவிற்கு சென்று செட்டில் ஆகி விட்டார்.
அவரது மகன் தனுஷ் தீவிர தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார். தனது மகனுக்கு சிறந்த மருத்துவமும் நல்ல மனநிலையும் இருக்க வேண்டும் என்பதற்காக நெப்போலியன் அமெரிக்காவிற்கு சென்று விட்டார். 27 வயதாகும் தனது மூத்த மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க நெப்போலியன் முடிவு செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெப்போலியன் மகன் தனுஷுக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் வீடியோ காலில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் போட்டோகிராபர் நிச்சயதார்த்த விழாவில் எடுத்த ஆல்பமை நெப்போலியனிடம் கொடுக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் நெப்போலியன் நாங்கள் கடல் கடந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறோம். ஆனால் எங்க வீட்டு மருமகள் தமிழ்நாட்டில் இருந்து தான் வர வேண்டும் என நினைத்தோம் என்பதை கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram