அவர் கல்யாணம் ஆனவர்னு தெரிஞ்சும் நா அவர் கூட.. பிரபல இயக்கனுருடன் வாழ்ந்தது பற்றி பல வருடங்களுக்கு பின் மனம் திறந்த நடிகை ப்ரேமி..

By Sumathi

Updated on:

எம்ஜிஆர், சிவாஜி நடித்த பல படங்களில் நடிகை பிரேமி நடித்திருக்கிறார். அவர் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த ஜானி படத்தில் ஸ்ரீதேவியின் உதவியாளராக கூடவே இருப்பார். அந்த படத்தின் இயக்குநர்தான் மகேந்திரன். அடுத்து உதிரிப்பூக்கள் படத்திலும் பிரேமி நடித்திருந்தார். இப்படி அவர் மகேந்திரன் படங்களில் நடித்த காலகட்டத்தில் அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாகி மாறியிருக்கிறது. ஒரு கட்டத்தில் மகேந்திரனை அவர் திருமணம் செய்துக்கொண்டார். தெறி படத்தில் வில்லனாக நடித்தவர் மகேந்திரன்தான். பேட்ட படத்தில் வில்லனின் தந்தையாக நடித்தவரும் மகேந்திரன்தான்.

   

இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை பிரேமி கூறியதாவது, மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் என்ற படத்தில், கதாநாயகியுடன் நடிக்கும் ஒரு வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால் என் மனதுக்கு ஏதோ நெருடலாக தெரிந்ததால் அந்த படத்தின் நடிக்க செலக்சனுக்கு நான் போகவில்லை. அடுத்து உதிரிப்பூக்கள், ஜானி என அவர் இயக்கிய படங்களில் நான் நடித்தேன். அப்போது ஏற்பட்ட பழக்கத்தால் அவரை திருமணம் செய்து, ஒரு ஆண் பிள்ளைக்கும் தாயானேன்.

என்னை திருமணம் செய்த காலகட்டத்தில் அவருக்கு படம் இயக்கும் வாய்ப்புகள் இல்லை. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டேன். அவரது வருமானமே இல்லாததால், நான் தையல் தொழில் செய்து, வீட்டிலேயே தைத்தேன். ஒரு மாமியுடன் சேர்ந்து அப்பளம் போட்டு கொடுத்தேன். இப்படி எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டோம். ஒரு கட்டத்தில் அவர் என்னை பிரிந்து சென்றுவிட்டார். பிறகு என்னுடன் அவர் சேரவே இல்லை.

இதையடுத்து என் அண்ணன், அண்ணி வந்து எங்களை அவர்களுடன் கூட்டிச் சென்று அவர்கள் வீட்டிலேயே வைத்துக்கொண்டனர். என் அப்பா, அம்மா எனக்கு ஆதரவாக இருந்தனர். சிங்கிள் பேரண்ட் ஆக இருந்து என் மகனை படிக்க வைத்து ஒரு ஆளாக்கினேன். இன்று என் மகன் நல்ல நிலையில் இருக்கிறான். என் அண்ணணே குடும்பத்தை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், ஒரு கட்டத்தில் நானும் வேலைக்கு போக ஆரம்பித்தேன்.

எனக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது. அதனால் மீண்டும் படங்களில் கிடைத்த வேடங்களில் நடித்தேன். மகேந்திரன் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தும் அவர் வாழ்க்கையில் நான் குறுக்கிட்டது மிகப்பெரிய தப்புதான். அதை நான் பிறகு உணர்ந்துக் கொண்டேன். அதற்கான தண்டனையும் எனக்கு கிடைத்து விட்டது என்று பிரேமி வேதனையாக கூறியிருக்கிறார்.

author avatar
Sumathi