எம்ஜிஆர், சிவாஜி செய்யாததை, நான் செஞ்சிருக்கேன்.. நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் நடிகர் சிவக்குமார்..

By Mahalakshmi

Updated on:

80 வயது கடந்த நிலையிலும் புத்துணர்ச்சியுடன் திடமாகவும் சினிமா துறையில் வலம் வருகிறார் நடிகர் சிவகுமார். தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என கூறப்படும்  நடிகர் சிவகுமார் தினமும் கடைபிடிக்கும் யோகாவும் உடற்பயிற்சியும்  தான் நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.

   

அது மட்டும் இல்லாமல் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத சிவகுமார் உடல்நிலையை  நல்முறையில் பேணி  காத்து வருகிறார்.  திரைபிரபலங்கள் மத்தியில் மிகவும் மதிக்கத்தக்க நடிகராக சிவகுமார் இருந்து வருகிறார்; அவருக்கு சினிமா துறையில் தனி மரியாதையை இருக்கிறது.  இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த ஓவியக் கலைஞராகவும் ஆற்றல் பெற்றவர்; இவர் கைவண்ணத்தில் எண்ணற்ற ஓவியங்கள் வரைந்து அதை கண்காட்சியில் மக்கள் பார்வையிட வைத்திருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி செய்யாதத, நான் செஞ்சிருக்கன்.. நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் நடிகர் சிவக்குமார்..

ஒரு கட்டத்தில் நடிப்பே வேண்டாம் என முடிவெடுத்த சிவக்குமார், கம்பராமாயணம் குறித்த ஆய்வுகளில் இறங்கி அது தொடர்பான சொற்பொழிவுகளை நடத்தினார். நடிகர் சிவகுமார் பல மேடைகளில் கம்பராமாயணம் மகாபாரதத்தில் கூறப்படும் சொற்பொழிவுகளை வெளியில் எடுத்துரைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சிவக்குமார் திருக்குறளை தொடர்ந்து நான்கு மணி நேரம் பேசிய வீடியோ இணையதளத்தில் இருப்பதாக  தெரிவித்திருக்கிறார்.

மேலும் யோகா குறித்து ஒரு விழிப்புணர்வு நிகழ்வில்  கலந்து கொண்டு பேசிய சிவகுமார் நான் இந்த அளவுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணம் யோகா பயிற்சி தான் என்று பெருமையாக கூறியிருக்கிறார். மேலும்,  சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோரெல்லாம் 70 வயதிலேயே இயற்கை எய்தி விட்டார்கள். அவர்கள் பல உலக சாதனையை  செய்திருந்தாலும் நான் இன்னும் 82 வயதில் மிக்க நலமுடன் இருகிறேன். அதற்கு காரணம் யோகா தான் என்று மாணவர்கள் இடையே எடுத்துரைத்து யோகா கற்றுக் கொள்ளுங்கள் என்று பரிந்துரையும்  செய்திருந்தார்.

author avatar
Mahalakshmi