#image_title
1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.
அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சீக்கிரமே உயிரிழக்கப் போகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ரஜினியை சூப்பர் வில்லன் ஆக்கியது பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு திரைப்படம். அதன் பிறகு ரஜினி தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகர் ஆனார்.
படத்தின் கதாநாயகர்களுக்கு இணையாக அவருக்கும் கைதட்டல், விசில்கள் கிடைக்க ஆரம்பித்தன. இந்த நேரத்தில் பைரவி படத்தில் கதாநாயகனாக நடித்தார் ரஜினி. அந்த படம் வெற்றி பெற்று அவரை நிரந்தரக் கதாநாயகனாக்கி விட்டது. அந்த படத்தைத் தயாரித்தது கதாசிரியர் கலைஞானம். அவருக்கு சமீபத்தில் ரஜினி ஒரு வீடு வாங்கிக் கொடுத்து நன்றிக் கடனை திருப்பி செய்தார்.
ஆனால் அந்த படத்தின் இயக்குனரான எம் பாஸ்கர் குறித்து ரஜினி எங்கேயுமே பேசியதில்லை என அவரின் மகன் பிரபு பாஸ்கர் ஒரு நேர்காணலில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் “அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ரஜினி தயங்கினார். ஏனென்றால் அப்போது வில்லனாக பிஸியாக நடித்து நல்ல மார்க்கெட்டில் இருந்தார். அதனால் ஹீரோவாக நடித்து வொர்க் அவுட் ஆகவில்லை என்றால் இருப்பதும் போய்விடும் என அஞ்சினார். ஆனால் என் அப்பாதான் கதையை சொல்லி, கண்டிப்பாக இந்த படம் ஓடும் என்று அவரை சம்மதிக்க வைத்தார்.
அந்த படத்துலதான் ரஜினி சாருக்கு சூப்பர் ஸ்டாருங்குற பட்டமும் போட்டாங்க. அது இன்னைக்கு வர நெலைச்சு நிக்குது. ஆனா அப்பா பேர எங்கயுமே ரஜினி சொன்னதில்லை. அது ஏன்னு எனக்குத் தெரியல” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…
பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…
முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப், பலரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டம் குறித்த வழக்கு விசாரணையில், தற்பொழுது திடுக்கிடும்…