Categories: சினிமா

அழுது கொண்டே பேசி வீடியோ வெளியிட்ட மன்சூர் அலிகான்.. இதுதான் விஷயமா..?

Spread the love

பிரபல நடிகரான மன்சூர் அலிகான் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1991-ஆம் ஆண்டு ரிலீசான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் மூலம் மன்சூர் அலிகான் பிரபலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு த்ரிஷாவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார்.

கடந்த மாதம் 30 ஆம் தேதி இரவு ஒரு மணிக்கு கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் மலை கிராமங்களான முண்டக்கை, சூரல் மழை மேப்பாடி, உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு கிராமங்கள் முற்றிலுமாக அழிந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நில சரிவினால் பாதிக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரை பலி எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் வயநாடு மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மன்சூர் அலிகான் அழுது கொண்டே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது கனப்பொழுதில், நொடிப் பொழுதில் உடல்கள் அடித்துச் செல்லப்பட்டு கட்டடங்கள், ஊர்கள், கிராமங்கள் பயமாகி உள்ளது. குடும்பம் குடும்பமாக மண்ணோடு மண்ணாக புதைந்து அவல நிலையில் வயநாடு மாறி உள்ளது.

இன்னொரு புறம் ராக்கெட், ஏவுகணைகள் குண்டுகள் வீசி கட்டடங்கள் நகரங்கள் ஊர்களை அழித்து ஒழித்து நாசமாக்கும் மனித பிண்டங்கள் ஆட்சியாளர்கள். மனிதம்.. மனிதம் கேள்விக்குறியில் இருக்கிறது. இயற்கையே யாவும். உயிரிழந்த வயநாடு மாமனிதர்களுக்கு என் நெஞ்சார்ந்த ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அழுது கொண்டே பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

BREAKING: செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்…. தவெக ஆட்சிக்கவிழ்ப்பு வழக்கில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

8 minutes ago

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

13 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

30 minutes ago

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

48 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

60 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

1 மணத்தியாலம் ago