#image_title
பிரபல நடிகரான மோகன்லால் திரைப்பட தயாரிப்பாளர், பின்னனி பாடகர், விநியோகஸ்தர் இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவர். மோகன்லால் சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மோகன்லால் மலையாள சினிமாவில் கொடி கட்டி பறக்கிறார். பத்மஸ்ரீ பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு மோகன்லாலுக்கு இந்திய ராணுவத்தின் சார்பாக கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல கிரிக்கெட் வீரர்களான எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் ஆகியோருக்கும் இந்த பதவி கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த மாதம் 30-ஆம் தேதி இரவு ஒரு மணிக்கு கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால் மலை கிராமங்களான முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டனர். தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ராணுவத்தினரும் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போது வரை பலி எண்ணிக்கை 344-ஆக உள்ளது. மீட்கப்பட்ட பல பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் மோகன்லால் ராணுவ உடையில் சென்று நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களையும் மோகன்லால் பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…