Categories: சினிமா

வறுமையினால் நாடகத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம்… நடிப்பினால் உயர்ந்து ஹெலிகாப்டர் வாங்கிய ஒரே நடிகை…

Spread the love

கே ஆர் விஜயா தமிழ் சினிமாவின் பழம்பெரும் முன்னணி நடிகை ஆவார். இவரின் இயற்பெயர் தெய்வநாயகி என்பதாகும். இவரது பெற்றோர்கள் மலையாளிகள் அவர். குடும்ப வறுமையின் காரணமாக நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார் கே ஆர் விஜயா. அதன்மூலம் சினிமா வாய்ப்பினை பெற்றார். கே ஆர் விஜயா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

1963 ஆம் ஆண்டு கற்பகம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கே ஆர் விஜயா. நடிக்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே 1966 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் கே ஆர் விஜயா. திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று நினைத்த கே ஆர் விஜயா தனது கணவர் சினிமாவில் நடிக்க ஒப்புதல் அளித்த பிறகு சினிமாவில் தொடர முடிவு எடுத்தார். கே ஆர் விஜயா கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அதில் 495 திரைப்படங்கள் அவர் திருமணத்திற்கு பிறகு நடித்தது தான் என்பது பலருக்கும் தெரியாது.

திருமணத்துக்கு பிறகு நடித்து பேரும் புகழும் அடைந்து நடிகர்களுக்கு இணையான சம்பளம் வாங்கிய ஒரே நடிகை கே ஆர் விஜயா அவர்கள் தான். அழகான சிரிப்பிற்கு சொந்தக்காரரான கே ஆர் விஜயா ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என்று அழைக்கப்பட்டார். தனது அபாரமான நடிப்பினால் மக்களை கவர்ந்த கே ஆர் விஜயா பல வெற்றி படங்களில் நடித்தார்.

தெய்வநாயகி என்ற பெயருக்கு ஏற்றார் போல் இவரது முகமும் தோற்றமும் இந்து பெண் தெய்வங்களின் பாத்திரங்களை சித்தரிப்பதற்காக இயக்குனர்களின் முதல் தேர்வாக கே ஆர் விஜயா எப்போதும் இருப்பார். அம்மன் வேடங்கள் இவருக்கு மிகவும் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் பொருந்தும். ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘மேல்மருவத்தூர் அற்புதங்கள்’ போன்ற பல பக்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் கே ஆர் விஜயா.

 

தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணனை என்றும் மறக்காத கே ஆர் விஜயா அவரை வைத்தே தனது நூறாவது படத்தையும் 200 வது படத்தையும் எடுக்கச் செய்தார். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் கே ஆர் விஜயா. தனது நடிப்பிற்காக நந்தி விருதுகள், இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், இரண்டு பிலிம்பேர் விருதுகள், ஒரு கேரள மாநில திரைப்பட விருது, நட்சத்திர சாதனையாளர் விருது ஆகிய விருதுகளை தன்னகத்தே கொண்டிருப்பவர் கே ஆர் விஜயா.

வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் கே ஆர் விஜயா. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேல் திரையுலகில் பணியாற்றியவர் கே ஆர் விஜயா. குடும்ப வறுமையின் காரணமாக வயிற்று பிழைப்புக்காக நடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நாடகத்தில் சேர்ந்த கே ஆர் விஜயா, சினிமாவில் நுழைந்து தனது அபாரமான நடிப்பினாலும் உழைப்பினாலும் உயர்ந்து தனியார் ஜெட் விமானத்தையும் ஹெலிகாப்டரையும் வாங்கிய ஒரே நடிகை என்ற பெருமையை பெற்றவர் கே ஆர் விஜயா.

admin

Recent Posts

BREAKING: செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்…. தவெக ஆட்சிக்கவிழ்ப்பு வழக்கில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

5 minutes ago

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

10 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

27 minutes ago

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

45 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

56 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

1 மணத்தியாலம் ago