செக் மோசடி வழக்கு: இயக்குனர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

By Soundarya on மார்கழி 19, 2025

Spread the love
இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், கடந்த 2016-ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்றிடம் பெற்ற 35 லட்சம் ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் தொடுக்கப்பட்ட செக் மோசடி வழக்கில் அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரரும் தயாரிப்பு நிறுவன இயக்குநருமான சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என உறுதி செய்தது. அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்ததோடு, வட்டியுடன் சேர்த்து மொத்தம் ₹48.68 லட்சம் நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.