தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் 2012ஆம் ஆண்டு வெளிவந்த ‘பீட்சா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்காக இவர் அறிமுக இயக்குனருக்கான சைமா விருதினை பெற்றார். அதுமட்டுமல்லாமல நல்ல திரைக்கதைக்கான விகடன் குழுமத்தின் விகடன் அவார்ட்ஸ் என்னும் விருதையும் பெற்றார்.
சிறந்த திரைக்கதைக்கான விஜய் அவார்ட்ஸ்யும் பெற்றார். மேலும் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் கூட இவருடைய இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜின் தந்தை ஒரு நடிகர் என்பது பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவரின் பெயர் நடிகர் கஜராஜ். ‘ ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மட்டுமல்ல, முண்டாசுப்பட்டி, பேட்ட, ராட்சசன், கபாலி, இறைவி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்பொழுது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…
ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…