இந்த பிரபல நடிகரின் மகன் தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜா..? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே… வைரலாகும் குடும்ப புகைப்படம்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் 2012ஆம் ஆண்டு வெளிவந்த ‘பீட்சா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்காக இவர் அறிமுக இயக்குனருக்கான சைமா விருதினை பெற்றார். அதுமட்டுமல்லாமல நல்ல திரைக்கதைக்கான விகடன் குழுமத்தின் விகடன் அவார்ட்ஸ் என்னும் விருதையும் பெற்றார்.

   

சிறந்த திரைக்கதைக்கான விஜய் அவார்ட்ஸ்யும் பெற்றார். மேலும் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் கூட இவருடைய  இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜின் தந்தை ஒரு நடிகர் என்பது பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவரின் பெயர் நடிகர் கஜராஜ். ‘ ஜகமே தந்திரம்’ என்ற  திரைப்படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தில் மட்டுமல்ல, முண்டாசுப்பட்டி, பேட்ட, ராட்சசன், கபாலி, இறைவி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். தற்பொழுது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.