திரைத்துறையின் தற்போதைய அவலநிலை குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார். சிறிய முதலீட்டுப் படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்காதது மற்றும் தணிக்கைச் சிக்கல்களால் ‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ போன்ற பெரிய திரைப்படங்களின் வெளியீடு பாதிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, ஓடிடி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிறு படங்களைப் புறக்கணிப்பதால், திரையரங்குகளே அவற்றின் ஒரே வாழ்வாதாரம் என்றும், அங்கு இடம் மறுக்கப்படுவது கலையைக் கொலை செய்வதற்குச் சமம் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
பிரம்மாண்டத் திரைப்படங்கள் வெளியாவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே தணிக்கைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற தற்போதைய விதிமுறைகள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை என அவர் விமர்சித்துள்ளார்.
இத்தகைய கெடுபிடிகள் படைப்பாளிகளின் சுதந்திரத்தைப் பாதிப்பதுடன், பண்டிகைக் கால வெளியீடுகளைச் சிதைத்து ஒட்டுமொத்தத் துறையையும் அழிவுக்கு இட்டுச் செல்லும் என எச்சரித்துள்ளார். எனவே, அரசியல் மற்றும் ரசிக மோதல்களைத் தூக்கி எறிந்துவிட்டு, சினிமாவைத் தற்காத்துக் கொள்ளத் திரைத்துறையினர் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Some Thoughts just as a Lover of CINEMA!!
No theatres for an Low budget Indie film #Salliyargal
Censor delay causing postponement of a Big budget Big Star like Vijay Sir’s film #JanaNayagan slated to release tomorrow…
Bookings are yet to open in many centres due to issue of… pic.twitter.com/9ixK3u2qRa
— karthik subbaraj (@karthiksubbaraj) January 8, 2026
