தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் அனல் பறக்க தொடங்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்த தேமுதிக தற்போது ஆளும் திமுக கூட்டணியை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது. அதிமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்ட ராஜ்ய சபா சீட்டு வழங்கப்படாததால் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள துடிக்கும் திமுக, திரை மறைவில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே தேமுதிக தங்களுடன் கூட்டணி அமைக்கும் என அதிமுக தரப்பு கூறுகிறது. ஆனால் பிரேமலதா பிடி கொடுக்காமல் உள்ளார். கடந்த தேர்தலில் ராஜ்யசபா சீட் கிடைக்காததால் இந்த முறை அதைப் பெற்றே ஆக வேண்டும் என பிரேமலதா உறுதியாக இருக்கிறாராம். அதனால்தான் திமுகவுக்கு எதிராக கூட பெரிதாக விமர்சனம் வைக்காமல் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். பொங்கலுக்குப் பிறகு இறுதி முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறதுm
