அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரையரங்கங்களில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் என அடுத்தடுத்த பல முன்னணி ஹீரோக்கள் உள்ள இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். படம் குறித்தும் தன்னடைய முந்தைய பிராஜெக்ட்கள் மற்றும் அடுத்ததாக தான் யோசித்து வைத்துள்ள ஸ்கிரிப்டுகள் குறித்தும் பல விஷயங்களை மகிழ் தன்னுடைய பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார். மேலும் படத்தில் அஜித்துடன் தான் இணைந்து செயல்பட்ட விதம் குறித்தும் அஜித்தின் குணம் குறித்தும், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்
அந்தவகையில் நடுத்தர வயதில் உள்ள ஒரு மனிதன் தன்னுடைய உலகத்தை காப்பாற்றுவதற்காக நடத்தும் போராட்டம் தான் விடாமுயற்சி படத்தின் கதை என்று மகிழ் திருமேனி பேட்டி ஒன்றி கூறி இருந்தார் . இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், அஜித்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்தது குறித்து வரவேற்பு தெரிவித்துள்ள அவர் அரசியல் காரணங்களுக்காக இந்த விருது கொடுக்கப்பட்டதா? என்று எனக்கு தெரியாது.
அஜித் அதற்கெல்லாம் கட்டுப்பட மாட்டார். விருது கொடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தது அவருடைய பண்பாடு. ஆனால் அதற்காக அவர் ஒரு கட்சிக்கு சப்போர்ட் செய்வார் என்று சொல்வதை நிச்சயமாக நம்ப வேண்டாம். அஜித் ரசிகர்களை சந்தித்தாலே அவருடைய புகழ் நிலைத்து நிற்கும்.
ஆனால் அஜித் ரசிகர்களை சந்திக்க மாட்டார். அது ஒன்றுதான் அவரிடம் இருக்கும் குறை. இதை செய்தாலே அவருடைய படங்கள் நன்றாக ஓடும்” என்று கூறியுள்ளார். மேலும் மற்றபடி அஜித் மிகச் சிறந்த மனிதர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் தாளமுத்து (60). இவருடைய 32 வயது மகன் அருள்ராஜ், கடந்த சில…
தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). கூலித் தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற…
ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி மாவட்டம், தாரகொண்டா கிராமத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள…
வங்கிகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) ஒரு பொன்னான வாய்ப்பை…
தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் இடதுசாரி…