வங்கிகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. கனரா வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி 11 பொதுத்துறை வங்கிகளில் உள்ள 6,715 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை (Degree) முடித்தவர்கள் இப்பணிக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 01.07.2026 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இப்பணிக்கான தேர்வு நடைமுறையானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுஎன மூன்று படிநிலைகளாக நடைபெறும். இதில் முதல் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக மட்டுமே கணினி வழியில் நடத்தப்படும். முதற்கட்டமாக 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு தகுதிப் போட்டி மட்டுமேயாகும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள், அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதன்மைத் தேர்வானது 200 மதிப்பெண்களுக்கான கொள்குறி வகை (Objective) கேள்விகளையும், 50 மதிப்பெண்களுக்கான கட்டுரை மற்றும் கடிதம் எழுதும் (Descriptive) பகுதியையும் உள்ளடக்கியது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, இறுதிப் பட்டியல் மூலம் பணி நியமனம் வழங்கப்படும்.
இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.07.2026க்குள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் https://ibps.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவு, ஓபிசி மற்றும் இடபிள்யூஎஸ் (EWS) பிரிவினருக்கு ரூ.850-ம், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.175-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்பச் சம்பளமாக ரூ.48,480 முதல் பல்வேறு சலுகைகளுடன் கூடிய சிறப்பான ஊதியம் வழங்கப்பட உள்ளதால், வங்கித் துறையில் சாதனை படைக்க விரும்பும் பட்டதாரிகள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய் நேரடியாகவே குதிரை பேரத்தில் (எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், தற்போதைய ஆட்சிக்கு எதிராக திரைக்குப் பின்னால் நடந்த ஒரு பெரும்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இலுப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கலாநிதி, நள்ளிரவில் மர்ம கும்பலா மிகக்…
தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் தாளமுத்து (60). இவருடைய 32 வயது மகன் அருள்ராஜ், கடந்த சில…
தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…