உனக்கு எதுக்கு அரசியல்..? விஜயிடம் பாரதிராஜா கேட்ட கேள்வி.. ஒரே வார்த்தையில் பதிலளித்த தளபதி..!!

By Priya Ram

Published on:

தளபதி விஜய் டி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

   

இந்த நிலையில் தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழுமூச்சாக அரசியலில் ஈடுபட போவதாக நடிகர் விஜய் ஏற்கனவே அறிவித்தார். மேலும் தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியையும் தொடங்கினார். வருகிற 2026-ஆம் ஆண்டு நடக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது.

விஜயின் அரசியல் பயணத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா அளித்த பழைய பேட்டி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. விஜயின் கத்தி படத்தின் பிரச்சினை போது இயக்குனர் பாரதிராஜா விஜய்க்கு துணையாக இருந்துள்ளார்.

படம் வெற்றிகரமாக ரிலீஸ் ஆன பிறகு பாரதிராஜாவை சந்திப்பதற்காக விஜய் அவரது வீட்டிற்கு சென்று நன்றி கூறியுள்ளார். அப்போது உனக்கு அரசியல் தேவையா என பாரதிராஜா விஜயிடம் கேட்டுள்ளாராம். அதற்கு விஜய் நாம் இன்னும் நிறைய விஷயங்களை சாதிக்க வேண்டும். அது போதும் என கூறியதாக பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ssmusic (@ssmusicofficial)

author avatar
Priya Ram