Connect with us

தமிழ் சினிமாவின் முதல் டைட்டில் பாடலை நாகேஷுக்காக எழுதிய கவிஞர் வாலி.. அது எந்த பாட்டு தெரியுமா..?

CINEMA

தமிழ் சினிமாவின் முதல் டைட்டில் பாடலை நாகேஷுக்காக எழுதிய கவிஞர் வாலி.. அது எந்த பாட்டு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட்டில் மிகப்பெரிய ரசிகர்களை வைத்து படம் எடுத்தாலும் டைட்டில் பாடல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ் சினிமாவில் முதன் முதலாக டைட்டில் பாடலை அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா? கே.பாலச்சந்தர் கடந்த 1968-ஆம் ஆண்டு எதிர்நீச்சல் என்ற படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் நடிகர் நாகேஷுகாக கவிஞர் வாலி முதல் டைட்டில் பாடலை எழுதியுள்ளார். வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல் என்ற பாடல் தான் தமிழ் சினிமாவில் ஹீரோவுக்காக எழுதப்பட்ட முதல் டைட்டில் பாடல் ஆகும். எதிர்நீச்சல் படத்தில் மேஜர் சுந்தர்ராஜன், ஜெயந்தி, சௌகார் ஜானகி, முத்துராமன், எஸ்.என் லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

 

ஐந்து குடும்பங்கள் வசிக்கும் ஒரு குடியிருப்பில் அனாதையான நாகேஷ் மாடிப்படிக்கு கீழ் குடியிருந்து கொண்டு அவர்கள் கூறும் வேலையை செய்து வாழ்கிறார். மேலும் கிடைத்த உணவை சாப்பிட்டுக்கொண்டு வறுமையிலும் கல்லூரியில் படித்து முன்னேறுவது பற்றி அந்த படத்தின் மையக்கருத்து விளக்குகிறது. வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் பட்டாலும் முன்னேற வேண்டும் என்பதற்கு உத்வேகமாக படம் அமைந்துள்ளது.

கவிஞர் வாலி இசையமைப்பாளர் குமார் ஆகிய இருவரும் வேறு ஒரு படத்திற்காக காதல் பாடலை உருவாக்கி உள்ளார்கள். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் அந்த பாடலை வேண்டாம் என கூறிவிட்டார். இதனால் எதிர்நீச்சல் படத்தில் அந்த பாடலை பயன்படுத்தி உள்ளார்கள். அந்த பாடல் தான் மாலையில் சந்தித்தேன், மையலில் சிந்தித்தேன் என்ற பாடல். இந்த பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.

author avatar
Priya Ram
Continue Reading
To Top