இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பாரதிராஜா, கமல்ஹாசன், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் . மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

கடந்த 1975-ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா இதுவரை பல்வேறு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு ஒரே திரைப்படத்தில் எடுக்க முடியாது. எனவே இரண்டு பாகங்களாக இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசன் திரைக்கதை எழுத போவதாக கூறப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் தக் லைப், இந்தியன் 2 ஆகிய படங்களில் பிசியாக இருப்பதால் தனுஷ் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்திற்கு திரைக்கதை எழுத உள்ளதாக தெரிகிறது.

கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்திய நடிகர் தனுஷ் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் 2 பாகங்களுக்கும் தலா 50 கோடி ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் தனுஷுக்கு பேரும், புகழும் கிடைப்பதை தாண்டி சம்பளமும் அதிகமாக கிடைக்கிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

