#image_title
தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். தற்போது விடுதலை -2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.
Balu Mahendra and Vetrimaaran
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் வெற்றிமாறன் அவரது குரு பாலு மகேந்திரா பற்றி பேசியுள்ள ஒரு கருத்து கவனம் ஈர்த்துள்ளது. அதில் “ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரனும் அவரது இளம் மனைவியும் இரவில் தனியாக அமர்ந்து பேசும் ஒரு காட்சியை எடுத்தோம். அதை எடுத்த முடிந்தவுடன் என்னுடைய இணை இயக்குனரான விக்ரம் சுகுமாரனிடம் ‘இந்த காட்சி பாலு மகேந்திரா சாருக்குப் பிடிக்கும்’ என மகிழ்ச்சியாக சொன்னேன்.
ஏனென்றால் பொல்லாதவன் படத்துல எந்தவொரு காட்சியும் பாலு மகேந்திரா சாருக்குப் பிடிச்சிருக்காது. ஏனென்றால் அந்த படத்தில் அவருக்கு எந்த கனெக்ஷனும் இருந்திருக்காது. ஆனால் கமர்ஷியலாக ஒரு படம் நல்லா பண்ணியிருக்கேன் என்ற சந்தோஷம் அவருக்கு இருந்தது. ஆனால் ஆடுகளம் காட்சியில் ஒரு 65 வயது முதியவரின் ஆற்றாமையை சொல்லும் விதமாக அந்தக் காட்சியை எடுத்திருந்தோம். அது கண்டிப்பாக சாருக்குக் கனெக்ட் ஆகும் என நினைத்தேன்” எனக் கூறியுள்ளார்.
Aadukalam movie scene
பாலு மகேந்திரா தன்னுடைய படங்களில் பெரும்பாலும் வன்முறையைத் தவிர்த்துவிடுவார். மெல்லிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே தனது படங்களை உருவாக்குவார். ஆனால் வெற்றிமாறன் அதற்கு நேர் மாறானவர். அவரது அனைத்துக் கதைகளிலும் வன்முறை முக்கியமான ஒரு அங்கமாக இருக்கும். பொல்லாதவன் படம் பார்த்துவிட்டு ‘உனக்குள்ள இவ்ளோ வன்முறை இருக்காடா வெற்றி’ என்றுதான் பாலு மகேந்திரா கேட்டாராம்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…