தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் அட்லீ. ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட் திரை உலகிற்கு நுழைந்த இவர் தற்போது அல்லு அர்ஜுனனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இது தொடர்பான அப்டேட் நேற்று வெளியானது. தமிழ் சினிமாவில் வெகு சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் வெகுவிரைவில் டாப் இயக்குனராக அட்லி மாறிவிட்டார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் எந்திரன் மற்றும் நண்பன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ராஜா ராணி திரைப்படம் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமானார். காதல் கதை மூலமாக ரசிகர்களை முதலில் கவர்ந்த அட்லி அடுத்து கமர்சியல் படங்களை கொடுத்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து விஜய் வைத்தே தெறி, மெர்சல் மற்றும் பிக்கில் என மூன்று படங்களை தொடர்ந்து இயக்கி ஹிட் கொடுத்த இவர் ஷாருக்கான் குறிவைத்து பாலிவுட்டில் களம் இறங்கி ஜவான் படம் மூலமாக மாபெரும் வெற்றியை கொடுத்தார். இந்த படம் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படியான நிலையில் தற்போது புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் உடன் அட்லி இணைந்துள்ளார். இது அல்லு அர்ஜுனின் 22 ஆவது திரைப்படமும் அட்லியின் ஆறாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை எடுக்க உள்ளனர். அதாவது படத்திற்கு 600 கோடி பட்ஜெட் என கூறப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் அட்லிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. இன்று சென்னையில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பட்டமளிப்பு விழாவில் இயக்குனர் அட்லிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்ற பிறகு பேசிய அட்லீ, என்னுடைய அடுத்த படமான அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படத்தை கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் இந்தியாவின் மிக விலை உயர்ந்த திரைப்படமாக இருக்கும். படத்தில் பல புதிய தொழில்நுட்பங்களை நாங்கள் கொண்டு வருகிறோம். இது நம் அனைவரையும் நூறு சதவீதம் பெருமைப்படுத்தும். நான் பெரிய கனவு காண்கின்றேன். இந்த படத்தின் பட்ஜெட் இன்னும் முடியவில்லை. படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளரை முடிவு செய்வார் என்று அட்லீ தெரிவித்துள்ளார்.
