காவ்யா மாறனுடன் காதல்.. முதல் முறையாக மனம் திறந்த அனிருத்.. ஷாக்கான ரசிகர்கள்..!

By Nanthini on ஆனி 14, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராகவும் பாடகராகவும் பலம் வந்து கொண்டிருப்பவர் தான் அனிருத். இவருக்கு தற்போது 34 வயது ஆகின்றது. இவரைப் பார்த்தால் குட்டி பையன் மாதிரி தான் இருக்கின்றார். இப்படியான நிலையில் அனிருத் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவருடைய வாழ்க்கையில் காதல் வந்திருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் கசிந்து உள்ளது. அவர் காவியா மாறனை தான் காதலிக்கிறாராம்.

Latest News Music Director Anirudh Ravichander Rumored To Marry SRH Team Owner Kavya Maran | அனிருத்துக்கு விரைவில் திருமணம் மணப்பெண் யார் தெரியுமா 33400 கோடி சொத்துக்கு வாரிசு Movies ...

   

சன் டிவி உரிமையாளரான கலாநிதி மாறனின் செல்ல மகளும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவியா மாறனை அனிருத் காதலிப்பதாக இணையத்தில் ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் காதல் குறித்து கலாநிதி மாறனிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி பேச்சுவார்த்தை நடத்திவிட்டதாகவும் விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றது. இப்படியான நிலையில் தன்னுடைய திருமண வதந்திக்கு அனிருத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருமணமா? வதந்திகள் பரப்புவதை நிறுத்துங்கள் என பதிவு செய்துள்ளார்.