இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் இன்று ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இதனால் அரசு சார்பில் ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் ஆதாரில் திருத்தங்கள் செய்வதற்கான கால் அவகாசம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக UIDAI அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்வது மற்றும் ஆவணங்கள் அப்டேட் செய்வது உள்ளிட்டவற்றை https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமில்லாமல் அப்டேட் செய்து பயனடையலாம் என்றும் அதற்கான கால அவகாசம் 2026 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
