அமீர் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான படம் பருத்திவீரன். கார்த்தியின் முதல் படமான அந்தப் படம்தான் இன்றுவரை அவரது அடையாளமாகவே இருக்கிறது. ஆனால் அந்தப் படத்திலிருந்து அமீருக்கும், ஞானவேல் ராஜாவுக்கும் முட்டிக்கொண்டது. அமீர் பொய் கணக்கு காண்பித்தார் என ஞானவேல் ராஜா சொல்ல, ஞானவேல் படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே காணாமல் போய்விட்டார். மீதி பணத்தை நானே தயார் செய்து படத்தை உருவாக்கினேன் என அமீர் கூற இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்தது.
#image_title

#image_title
இந்த விவகாரம் 17 வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக தன்னை மிரட்டி பருத்திவீரன் படத்தை எழுதி வாங்கிவிட்டார்கள் என்பதும் அமீரின் வாதமாக இருக்கிறது. தனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத்தரும்படி அமீர் நீதிமன்றத்துக்கும் சென்றுவிட்டார். அந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதைத்தொடர்ந்து ஞானவேல் ராஜா தனது பேட்டியில் அமீரை சகட்டுமேனிக்கு மட்டம் தட்டி பேசினார். இது படைப்பாளிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இயக்குனர் சசிகுமார்,, சமுத்திரக்கனி, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, பாரதிராஜா என பிரபலங்கள் பலரும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து ஞானவேல் ராஜாவும் மன்னிப்பு கேட்டார். ஆனால் தற்பொழுது வரை இந்த பிரச்னை முடிவடையவில்லை. இந்த விஷயத்தில் இன்னும் சூர்யா, கார்த்தி , சிவகுமார் என மொத்த குடும்பமும் அமைதி காத்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையே தற்பொழுது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை நாம் அறிவோம். பல்வேறு பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை அரசுக்கு கொடுத்து வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்திருந்தனர். தற்பொழுது இயக்குனர் அமீர் தனி ஒருவராக அந்த 10 லட்சம் ரூபாயை நிதி உதவிக்கு கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘பொய் கணக்கு சொன்னதா சொன்னீங்களே ? இப்ப என்ன சொல்ல போறீங்க?’ அமீருக்கு ஆதரவாக குரலெழுப்பி, அவரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.
Actor & Director #Ameer along with JSM Pictures #JafferSadiq met @CMOTamilnadu Thiru @mkstalin & donated 10 Lacs towards Hon’ble Chief Minister Relief Fund for #MigJamCyclone@directorameer @arjaffersadiq @onlynikil pic.twitter.com/W47fdalF1M
— Nikil Murukan (@onlynikil) December 16, 2023
