விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் சண்டைகளும் ,சர்ச்சைகளும் அதிக அளவில் வன்மமும் கொட்டி கிடக்கிறது. ஆனாலும் நாளுக்கு நாள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலாக பார்த்துக் கொண்டுதான் வருகின்றனர். இன்னும் இந்த சீசன் முடிவடைய நான்கு வாரங்கள் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் கடந்த வாரத்தில் மிட் வீக் எவிக்ஷனில் அனன்யாவும், இவரை தொடர்ந்து வார இறுதியில் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். நிக்சன், கூல் சுரேஷ் இருவருமே குறைவான வாக்குகளை பெற்று கடைசி இரண்டு இடங்களில் இருந்த நிலையில் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். சில வாரங்களாகவே இவர் வீட்டிற்கு போக வேண்டும் எனவும் கூறி வந்ததாலும், விளையாட்டில் ஈடுபாடு இல்லாமல் உட்கார்ந்திருந்ததுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்க சுத்தமாக தனக்கு பிடிக்கவே இல்லை என்று அவர் கூறியது போலவே அவரின் ஆசையை ரசிகர்களும் நிறைவேற்றியுள்ளனர் . பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவருக்கு ரூ. 15 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஸ்கூல் சுரேஷை பிரபல பத்திரிக்கை ஒன்று பேட்டி எடுத்துள்ளது.

#image_title
அந்த வீடியோவில் அவர், ‘ பிக் பாஸ்க்கு அப்புறம் என் வாழ்க்கையே மாறிடுச்சு. என்ன சொல்றதுன்னு தெரியல. மளமளன்னு பேசிக்கிட்டே இருப்பேன். ஆனா இப்ப வார்த்தையே வரமாட்டேங்குது .சார்ஜ் ஏத்திக்கிட்டு வந்து இனி பழைய கூல் சுரேஷா மாறனும்.’ என்று அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
