அணையாத தீயாய் எரிந்துகொண்டிருக்கும் ‘பருத்திவீரன்’ விவகாரம்.. திடீரென்று சூர்யாக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் அமீர் வெளியிட்ட பதிவு..

By Begam on மார்கழி 14, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக். இவர் ‘பருத்திவீரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். பருத்திவீரன் திரைப்படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை பல வருடங்களாக  இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் இடையே இன்றும் தொடர்ந்து வருகிறது .

   

இவர்களின் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் தான் உள்ளது. இந்நிலையில் திடீரென இதில் திரை பிரபலங்கள் குறுக்கிட்டு இயக்குனர் அமீருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். முக்கியமாக இத்திரைப்படத்தில் நடித்த கலைஞர்கள் ஒவ்வொருவரும் இயக்குனர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் .ஏனென்றால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டியில் அவ்வளவு தரக்குறைவாக இயக்குனர் அமீரை பேசி இருந்தார்.

   

 

இதனால் தற்பொழுது பிரபலங்கள் ஒவ்வொருவராக பொங்கி எழுந்து தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது வரை நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி , சிவகுமார் குடும்பமே வாய் மூடி அமைதி காத்து வருகின்றனர்.  சமீபத்தில் கூட அமீர் ‘எனக்கு பிச்சை போட வேண்டாம். நான் என்னுடைய உரிமையை கேட்கிறேன்’ என பதிவு ஒன்றை வெளியிட அது இணையத்தில் வைரலானது.

#image_title

இந்நிலையில் இயக்குனர் அமீர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ‘தனது முதல் திரைப்படமான’ மௌனம் பேசியதே’ வெளியாகி 21 வருடங்களை நிறைவு செய்திருப்பதாகவும், இத்திரைப்படத்தில் நடித்த திரு. சூர்யா, செல்வி திரிஷா ,திருமதி. லைலா போன்ற  நடிகர், நடிகைகளுக்கும் மேலும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், திரைத்துறை தொழிலாளர்களுக்கும் எனது நன்றிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது அவரின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு…