MID WEEK EVICTION.. பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.. வித்தியாசமான முறையில் போட்டியாளரை வெளியேற்றும் பிக் பாஸ்..

By Begam on மார்கழி 14, 2023

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இன்னும் 5 வாரங்களில் முடிவடைய இருக்கும்  நிலையில் 13 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் வாரம் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில்  வெளியேற்றப்படுவார்கள்.

   

ஆனால் கடந்த வாரம் மிக்ஸாம் புயல், சென்னை வெள்ளத்தின் காரணமாக எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்த வாரம் இரண்டு எவிக்சன் கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது .அதன்படி இந்த வார நாமினேஷனில் அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு, நிக்சன், கூல் சுரேஷ், அனன்யா என 6  போட்டியாளர்கள் உள்ளனர்.

   

 

இவர்களில் கூல் சுரேஷ் மற்றும் அனன்யா இருவரும் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதால் இருவரில் ஒருவர் தான் வெளியேற்றப்படுவார்கள் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ இணையத்தில்  இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதில் பிக் பாஸ் Mid Week Eviction என்று அறிவித்துள்ளார். இதில் நாமினேட் ஆன நபர்களை ஒன்றாக நிற்க வைத்து சில புகைப்படங்களை கொடுத்து ஒட்ட சொல்லுகிறார் இதில் யாருடைய புகைப்படம் நிறைவாகவில்லையோ, அவர் இந்த வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஒருவர் வெளியேறவும் செய்கிறார். ஆனால் அவர் யார் என்பது நமக்கு தெரியவில்லை.  இதோ அந்த ப்ரோமோ…