சிவாஜி கணேசனுக்கு முன்னால் நாற்காலியில் உட்கார மறுத்த இயக்குனர்… அதுக்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

By vinoth on பங்குனி 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன். பி யு சின்னப்பா, எம் ஆர் ராதா, பாலையா என சிறந்த நடிகர்களின் வரிசையில் பராசக்தி மூலமாக அதிர்வலையை உருவாக்கியவர் சிவாஜி கணேசன். அதன் பிறகு 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக வலம் வந்தார். ஆனால் அவருக்கு ஒரு முறை கூட நடிப்புக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் அவர் மிகை நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்று அவர் மேல் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் அவருக்கு தன்னுடைய கேரியரின் இரண்டாம் இன்னிங்ஸில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் விதமாக முதல் மரியாதை, தேவர் மகன், படையப்பா போன்ற படங்களில் வேடம் கிடைத்தது.

   

இதில் அவர் கடைசியாக நடித்த படங்களில் ஒன்று விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமான பூப்பறிக்க வருகிறோம். இந்த படத்தில் சிவாஜி கணேசன் இரண்டு குடும்பங்களை சேர்த்து வைக்கும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தி ஏ வெங்கடேஷ் இயக்கியிருந்தார். படத்தின் கதையை சிவாஜியிடம் சொல்ல சென்ற அனுபவம் பற்றி அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

   

அவரை சந்தித்த சிவாஜி கணேசன் தனக்கே உரிதாக கம்பீர குரலில் “எனக்கு எதோ கதை வச்சிருக்கீங்களாமே என்று கேட்க, ஆமாம் என்று கூறியுள்ளார். அதன்பிறகு சிவாஜி உட்காருங்க” என்று சொல்ல, வெங்கடேஷ் தரையில் அமர்ந்துள்ளார். ஏன் தரையில் அமர்ந்தீங்க, இருக்கையில் உட்காருங்க, அப்புறம் இயக்குனரை தரையில் அமர வைத்து கதை கேட்டார் என்று என் மேல் குற்றச்சாட்டு வரும் எனக் கூறியுள்ளார்.

 

ஆனால் இயக்குனர் வெங்கடேஷ் நாற்காலியில் உட்காராமல் “சார், நான் ஊரில் தியேட்டரில் தடை டிக்கெட் எடுத்து உங்களை அண்ணாந்து பார்த்து வளந்தவன். இப்ப உங்களுக்கு சமமா நானும் உட்கார்ந்தால் என்னால் கதை சொல்ல முடியாது. தரையில் உக்காந்து உங்களை அண்ணாந்து பார்த்தால்தான் என்னால் கதை சொல்ல முடியும்” என சொல்லியுள்ளார். அவர் கதை சொன்ன விதம் சிவாஜிக்கு பிடிக்க அந்த படத்தில் நடித்தார்.