Connect with us

கமல் பட ஷூட்டிங்கில் தக்காளி சாதம்.,. விஜயகாந்த் பட ஷூட்டிங்கில் எல்லோருக்கும் அன்லிமிடெட் கறி விருந்து! அப்பவே மாஸ் காட்டிய கேப்டன்!

CINEMA

கமல் பட ஷூட்டிங்கில் தக்காளி சாதம்.,. விஜயகாந்த் பட ஷூட்டிங்கில் எல்லோருக்கும் அன்லிமிடெட் கறி விருந்து! அப்பவே மாஸ் காட்டிய கேப்டன்!

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அறிமுக இயக்குனர்களுக்கு அதிகளவில் வாய்ப்பளித்த நடிகராக விஜயகாந்த் இருந்தார். அவர் நடித்த பல வெற்றிப் படங்களை திரைப்பட கல்லூரி மாணவர்கள் இயக்கினார்கள். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

விஜயகாந்த் 80 களிலும் 90 களிலும் பல சொந்தப் படங்களை தயாரித்தார். அந்த படங்களின் தயாரிப்பின் போது ஹீரோவில் இருந்து அங்கு வேலை செய்யும் கடைநிலை ஊழியர் வரை ஒரே விதமான சாப்பாடு போடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அப்போதெல்லாம் சினிமா ஷூட்டிங்கில் சைவ சாப்பாடு போடுவதுதான் வாடிக்கை. ஆனால் அதை மாற்றி தினமும் அசைவ சாப்பாடு என்ற முறையைக் கொண்டுவந்தது விஜயகாந்த் கம்பெனிதான்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம். விஜயகாந்த் நடிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான படம் உழவன் மகன். ஊமை விழிகள் படத்திற்கு பிறகு ஆபாவானன் கதையில், அரவிந்த் ராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், விஜயகாந்த், ராதிகா, ராதா, நம்பியார், ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்ராஹிம் ராவுத்தர் இந்த படத்தை தயாரித்திருந்தார். விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

   

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நாளில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தின் படப்பிடிப்பும் நடந்துள்ளது. இதில் நாயகன் படத்தின் படப்பிடிப்பில், படக்குழு அனைவருக்கும் தயிர்சாதம் மற்றும் தக்காளி சாதம் வழங்கப்பட்டபோது, உழவன் மகன் ஷூட்டிங்கில், அனைவருக்கும் கறிவிருந்து வைத்துள்ளார். விஜயகாந்த். இதனால் நாயகன் படப்பிடிப்பில் வேலை செய்தவர்கள் சிலரும் இங்கு வந்து சாப்பிட்டுவிட்டு சென்றார்களாம்.

 
Continue Reading
To Top