நல்ல Content வேணும்.. பார்ட் 4 தானா இல்ல 5,6-னு போயிட்டே இருக்குமா.? பிரபல இயக்குனரை கிழி கிழின்னு கிழித்த Blue சட்டை மாறன்..

By Ranjith Kumar on பங்குனி 15, 2024

Spread the love

2014ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் அரண்மனை. இத்திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து, 2016ல் அரண்மனை 2 திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.  இதைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் 2021 இல் அரண்மனை 3 திரைப்படம் வெளிவந்தது.

இந்த படத்தில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தினை குஷ்பு தயாரித்திருந்தார். படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது .இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

   

இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி அரண்மனை 4 திரைப்படத்திற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர் சி இந்த பாகத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மூன்றாம் பாகத்தில் நடித்த ராசி கண்ணா இந்த பாகத்தில் இணைந்துள்ளார்.

   


அதோடு மட்டும் இல்லாமல் அரண்மனை 4 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகை தமன்னாவும் இத்திரைப்படத்தில் நடிக்கிறார்  சுந்தர் சி தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஆனந்த விகடன் முன் அட்டை படத்தில் சுந்தர் சி அரண்மனை 4 புகைப்படத்தை வைத்து, தமிழ் சினிமாவில் ஏன் நல்ல படங்கள் வரவில்லை என்றும், இதுபோல் பெரிய பெரிய இயக்குனர் நடிகர்கள், ஜாம்பவான்கள், இசையமைப்பாளர்கள் என்று பலரும் ஒரே படத்தில் குவிந்தால், மற்ற சிறு இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்று போட்டிருந்த தகவலை,

 

ப்ளூ சட்டை மாறன் அவர்கள் எடுத்து தன் இணையதள பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இதை கலாய்த்துள்ளார்; அதாவது, உண்மைதான் சார், நல்ல படம் தமிழ் சினிமா எல்லாம் வேணும், அதை இப்போதைக்கு யாரும் தரல, சுந்தர் சி அரண்மனைப்படுத்த 1,2,3,4-லுனு எடுத்துகிட்டே போறாரு, இதோட நிக்குமா இல்ல 5,6-ன்னு போய்கிட்டே இருக்குமான்னு தெரியல? அப்படின்னு சுந்தர் சி யின் அரண்மனை படத்தை பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.